அலாஸ்காவில் 7.3 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்!
சுனாமி எச்சரிக்கை
நியூயார்க், ஜூலை 17 - அமெரிக்காவின் அலாஸ்கா நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அலாஸ்காவில் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை நண்பகல் 12.37 மணியளவில் 7.3 அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அலாஸ்காவில் உள்ள சாண்ட் பாயிண்ட் தீவுக்கு 87 கி.மீ. தொலை வில் சுமார் 20 கி.மீ. ஆழத்தில் இந்த நிலடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அலாஸ்கா மாகாணத்தில் உள்ள பல்வேறு நகரங்களில் சிறிய அளவில் பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அதிகபட்சமாக 5.2 ரிக்டர் அளவில் மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உயிர்ச் சேதம் அல்லது பொருட்சேதம் பற்றிய தகவல்களை இதுவரை அதிகாரப்பூர்வமாக அமெரிக்க அரசு வெளியிடவில்லை. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து தெற்கு அலாஸ்கா மற்றும் அலாஸ்கா பெனின்சுலா பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அலாஸ்கா கடற்கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.