பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யக்கோரி போராட்டம்
உதகை, ஜூலை 17- நீலகிரியில் விளையும் பசுந்தேயிலைக்கு குறைந்தபட்சமாக கிலோவிற்கு ரூ.40 விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டத்தில் சுமார் 65 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தேயிலை சாகுபடி செய்யப்படுகிறது. 65 ஆயிரம் விவசாய குடும்பங்கள் தேயிலை விவசாயம் மேற் கொண்டு வருகின்றனர். மேலும் 2 லட்சம் பேர் மறைமுகமாக வேலை வாய்ப்பு பெற்று வரு கின்றனர். விவசாயிகள் பறிக்கும் பசுந்தே யிலை நீலகிரி மாவட்டத்தில் உள்ள நூற்றுக் கும் மேற்பட்ட தனியார் தேயிலை தொழிற் சாலைகளுக்கும் தமிழக அரசின் கட்டுப்பாட் டில் உள்ள 16 கூட்டுறவு தொழிற்சாலைக ளுக்கும் அனுப்பப்படுகிறது. அங்கு தயா ரிக்கப்படும் தேயிலைத் தூள் இன்ட்கோசர்வ் மற்றும் குன்னூர் தேயிலை ஏல மையம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. பசுந்தேயிலைக்கான கொள்முதல் விலையை மாவட்ட ஆட்சியர், தேயிலை வாரியம் இணைந்து மாதந்தோறும் நிர்ணயம் செய்யப்படும் நிலையில், தேயிலை தொழிற் சாலைகள் அந்த விலையை வழங்குவ தில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகி றது. இதனிடையே கடந்த 25 ஆண்டுகளாக தேயிலைக்கு உரிய விலை கிடைப்ப தில்லை என்று கூறி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். ஆனால், இதுவரை தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கப்படவில்லை. இந்நிலை யில் நீலகிரி மாவட்ட ஆரி கவுடர் விவசாயி கள் சங்கம் சார்பில் உதகை ஏடிசியில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து சங்க தலைவர் மஞ்சை மோகன் கூறியதாவது, 25 ஆயிரம் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை அங்கத்தினர்க ளுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தேயிலை வாரியம் நிர்ணயித்த மாதாந்திர விலையை தென்னிந்திய தேயிலை வாரி யம் உடனடியாக வழங்க வேண்டும். ஒன்றிய, மாநில அரசுகள் தேயிலைத்தூள் ஏல மையங் களில் ஒரு கிலோ தேயிலை தூளுக்கு ரூ.200க்கும் குறையாமல் ஏலத் தொகை யினை நிர்ணயித்து சட்டம் இயற்ற வேண்டும். ஒன்றிய அரசு பசுந்தேயிலை சாகுபடியாளர் கள் எதிர்கொள்ளும் செலவு தொகையினை ஈடு செய்யும் விதமாக ஒரு கிலோ பசுந்தேயி லைக்கு ரூ. 40க்கு குறையாமல் மாதாந்திர விலை நிர்ணயம் செய்ய வேண்டும். பசுந் தேயிலை பயிர் சாகுபடியினை ஒன்றிய அரசு விவசாய அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்து நீலகிரி மக்களின் வாழ்வாதார பிரச்ச னைகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண் டும். இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணா விட்டால் எதிர்காலத்தில் அனைத்து சங்கங் கள் சார்பில் மாநில அளவில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.