tamilnadu

img

தொழில்நுட்ப கதிர்

இந்தியாவில் “இமேஜின் மீ” ஏஐ அம்சம் அறிமுகம்  செய்த மெட்டா நிறுவனம்!

மெட்டா நிறுவனம், “இமேஜின் மீ” (Imagine Me) ஏஐ அம்சத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பேஸ்புக் மெசெஞ்சர், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட மெட்டாவின் மெசேஜிங் செயலிகளில் இயங்கும் புதிய செயற்கை நுண்ணறிவு வசதியாகும். இந்த ஏஐ மூலம் பயனர்கள் பல்வேறு பாணிகளிலும், அமைப்புகளிலும் தங்களது தனிப்பயனாக்கப்பட்ட படங்களை உருவாக்க முடியும். இந்த அம்சமானது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய  நாடுகளில் கடந்த 2024-ஆம் ஆண்டே அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது, இந்த அம்சம் இந்திய பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மெட்டா தளங்களில் ‘இமேஜின் மீ’-ஐ எவ்வாறு பயன்படுத்துவது? 1) வாட்ஸ்அப், பேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராமில் மெட்டா AI சாட்-ஐ திறக்கவும். 2) “Imagine me as” என டைப் செய்து, பின்னர் நீங்கள் விரும்பும் ப்ராம்ட்டை (Prompt) அனுப்பவும். 3) வெவ்வேறு கோணங்களில் இருந்து மூன்று செல்பிகளை வழங்குவதன் மூலம் உங்கள் முக அமைப்பை பகுப்பாய்வு செய்ய மெட்டா AI-க்கு அனுமதி வழங்க வேண்டும். 4) AI உருவாக்கிய உங்கள் படத்தைப் பெற்று, பிற ப்ராம்ட்களுடன் தொடர்ந்து பரிசோதனை செய்யலாம்.  5) தேவைக்கேற்ப படங்களைத் திருத்தவும், மீண்டும் உருவாக்கவும் அல்லது நீக்கவும் செய்யலாம். இந்த ஏஐ அம்சம், பயனர்களின் கற்பனையை உயிர்ப்பிக்க ஒரு புதிய வழியை வழங்குகிறது. 

கூகுளின் ‘சர்கிள் டு சர்ச்’ இல் புதிய தேடல் அம்சம்!

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் உள்ள ‘சர்கிள் டு சர்ச்’ (Circle to Search) அம்சத்தில்,  பாடல்கள் தேடப்பட்ட ஹிஸ்டரி (Song Search History) என்ற புதிய ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. ‘சர்கிள் டு சர்ச்’ Bar-இல் உள்ள மியூசிக் ஐகானை கிளிக் செய்தால், வலது மேற்புறத்தில் clock icon காண்பிக்கப்படும். அதனை தேர்வு செய்தால், அண்மையில் தேடப்பட்ட பாடல்களின் ஹிஸ்டரி காண்பிக்கப்படும். அந்த ஹிஸ்டரியில், பாடல் தலைப்பு, பாடகர்களின் பெயர் மற்றும் தேதி ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இந்த ஹிஸ்டரி பக்கத்தில், ஒரு மாதத்தின் 10 Search Entries வரையிலான தரவுகள் இருக்கும். அதே சமயம் “Show full history” என்ற ஆப்ஷனும் கூகுளின் “My Activity” பக்கத்தில் வழங்கப்படுகிறது. இந்த அம்சம் மூலம் பாடல்களை தேடும் அனுபவம் மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது.

சாட் ஜிபிடி ப்ளஸ் பயனர்களுக்கு  புதிய அம்சம் அறிமுகம்!

மேக் ஓஎஸ் (Mac OS) பயனர்களுக்கான சாட் ஜிபிடி ப்ளஸ் (Chat GPT Plus) செயலியில் “ரெகார்ட் மோட்” (Record Mode) என்ற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேக் ஓஎஸ் இயங்குதளத்திற்கான சாட் ஜிபிடி ப்ளஸ்-இல் வழங்கப்பட்டுள்ள  இந்த Record Mode அம்சம், உங்கள் ஆன்லைன் கூட்டங்களை பதிவு செய்ய உதவுகிறது. இதன் மூலம் உங்கள் பணிகளை எளிதாக முடிக்க முடியும். மேலும், குறிப்புகளை உள்வாங்கக்கூடிய இந்த அம்சம், ஆடியோ பைல்களை செயலாக்கம் செய்யவும், ஆடியோ தரவுகளை உரைகளாக மாற்றவும் உதவுகின்றது.