நகராட்சி நியமன உறுப்பினர் பதவிக்கு வேட்புமனு தாக்கல்
ஈரோடு, ஜூலை 17- சத்தியமங்கலம் நகராட்சி நியமன உறுப்பினராக தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற் றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார் பில் வியாழனன்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட் டது. தமிழ்நாடு அரசு அறிவித்தபடி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பி னராக விண்ணப்பிக்க வியாழனன்று இறுதி நாளாகும். அதன்படி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நக ராட்சி ஆணையரிடம் சாமுவேல் வேட்புமனுவை தாக் கல் செய்தார். அதேபோல் அரியப்பம்பாளையம் பேரூ ராட்சியில் கிருஷ்ணசாமி செயல் அலுவலரிடம் வேட்பு மனு விண்ணப்பத்தை வழங்கினார். இந்நிகழ்வில் சங்கத்தின் சத்தி வட்டார செயலாளர் எஸ்.ஏ.ராம்தாஸ் மற்றும் கே.எம்.விஜயகுமார், கே.ஆர்.திருத்தணிகாச் சலம், கமிட்டி உறுப்பினர் சாமுவேல், எம்.கிருஷ்ண சாமி, எஸ்.ராமசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.