tamilnadu

img

செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஜூலை 17- சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட வாழ்வா தார கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் மேம் பாட்டு சங்கத்தினர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவ லக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம், மகப் பேறு விடுப்பிற்கான ஊதியம், உயர்த்தப்பட்ட ஊதி யம் ரூ.18 ஆயிரம் அனைவருக்கும் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய பணி இடங்கள் உருவாக்கப்பட்டு பணி நிரந்தரம் செய்ய  வேண்டும், அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களை யும் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் வியாழனன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். சங்க மாவட்டத் தலைவர் ஜெ.ஜெயசுகி தலைமை யில் ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் மா.தமிழ் செல்வி வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ரமேஷ் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். சகோதர சங்க நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர். அரசு ஊழியர் சங்க  மாவட்டச் செயலாளர் ச.விஜயமனோகரன் நிறைவுரை யாற்றினார். சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் நிஷா நன்றி கூறினார்.