tamilnadu

img

பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் ஆட்சியரிடம் மனு!

பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் ஆட்சியரிடம் மனு!

சேலம், ஜூலை 17- தமிழ்நாடு பட்டுக்கூடு உற்பத்தி விவசாயி கள் நல சங்கத்தின் சார்பில், சேலம் மாவட்ட பட்டு வளர்ச்சித் துறை இயக்குனர் அலுவல கத்தில் வியாழனன்று கோரிக்கைகள் அடங் கிய மனுவை அளித்தனர். அம்மனுவில் தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாட்டில் பட்டுக்கூடு உற்பத்தி செய்யும் விவசாயிகள் தொடர்ந்து புழு வளர்ப்பில் தோல்வி அடைந்து வருகினறனர். இதற்கு  முக்கிய காரணங்களாக முட்டை மற்றும்  இளம் புழுக்களின் தரமின்மை, இடுபொருட் கள் மற்றும் தளவாடப் பொருட்களின் விலை யேற்றம், கட்டுப்படியாகாத பட்டுக்கூட்டின்  விலை மற்றும் தட்பவெப்ப பருவநிலை மாற் றம் ஆகியவை முக்கிய காரணங்களாகும்.  எனவே, தரமான முட்டைகள் அரசு வித்தகத் திலிருந்து கிடைக்க உறுதி செய்ய வேண்டும்.  இளம் புழு வளர்ப்பு மையத்தில் முட்டை  பொரித்தநாளிலிருந்து உதவி இயக்குனர்  தலைமையில் ஆய்வு செய்து, தரமான புழுக் கள் என்று உறுதி செய்து சான்று வழங்கிய  பின்னரே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். அங்காடியில் ஏலம் நடைபெறும் போது, உதவி இயக்குனர் ஆய்வு செய்து விவசாயி களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு கிலோ பட்டுக்கூடுக்கு அடிப்படை விலை ரூ. 700 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும். பட்டு விவசாயிகளுக்கு தொழில்நுட்பங்களை எடுத்துரைக்க களப்பணியாளர்கள் தோட்டங்களுக்கும் பண்ணைகளுக்கும் வரும்போது, ஜிபிஎஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தி கண்காணிக்க  வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள் ளது. முன்னதாக, இந்நிகழ்வில் சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்வராஜ் தலைமையில், மாநிலச் செயலாளர் பொன்னுசாமி, மாநிலப் பொருளாளர் கனகராஜ், மாநில ஒருங்கி ணைப்பாளர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.