states

img

தீக்கதிர் விரைவு செய்திகள்

கர்நாடகாவில் சம்பள உயர்வு கோரி ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி முதல் அரசு பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி பல்வேறு இடங்களில் வெள்ளம் மற்றும் சிறிய அளவிலான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பீகாரில் ஆகஸ்ட் மாதம் முதல் 125 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். தூய்மையான நகரங்கள் பட்டியலில் மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரம் 8ஆவது முறையாக முதலிடத்தை பிடித்துள்ளது. தலைநகரங்களின் பிரிவில் சென்னைக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது.  “ஒடிசா மாநிலத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவிக்கு நீதி கோரி, அனைத்து மாவட்டங்களிலும் 8 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்துக்கு முழு ஆதரவு கிடைத்துள்ளது. பொது மக்களும் போராட்டத்துக்கு ஆதரவளித்து, மாணவி யின் தற்கொலைக்கு நீதி கோருகின்றனர்” என ஒடிசா காங்கிரஸ் தலைவர் பக்த சரண் தாஸ் செய்தியா ளர்கள் சந்திப்பின் போது கூறியுள்ளார்.