சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் முகமது சலீம்
நரேந்திர மோடி நாட்டின் பிரதமர். அவர் எங்கே வேண்டுமானாலும் செல்லலாம். அவருக்கு உரிமை உள்ளது. தற்போது மேற்கு வங்கம் வந்துள்ளார். ஆனால் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு மட்டும் ஏன் இன்னும் செல்லவில்லை? இது புதிராக உள்ளது.
சிவசேனா (உத்தவ்) எம்.பி., பிரியங்கா சதுர்வேதி
அகமதாபாத் விமான விபத்துக்கு காரணம் இறந்துபோன விமானியர்கள் என்றுதொடர்ச்சியாக செய்திகள் வெளியாகி வருகிறது. விமானிகளுக்கு எதிராக தினமும் ஒரு தீர்ப்பைப் போல விசுவாசத்துடன் செய்திகள் வெளியிடும் ஊடகங்களின் துணிச்சலுக்கு ஒருவித ஒத்துழைப்பு தான் காரணம். இந்த ஒத்துழைப்பை யார் அளிக்கிறது? உள்நாட்டு தகவல்களை சர்வதேச ஊடகங்களுக்கு கசியவிடுவோருக்கு தண்டனை வழங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி
பீகாரில் பாஜக - ஐக்கிய ஜனதாதளம் கூட்டணியின் காட்டாட்சி நடக்கிறது. பீகார் மக்கள் யாரும் பாதுகாப்பாக இல்லை. பாஜகவின் “இரட்டை இயந்திர” அரசு என்பதன் விளக்கம் ஊழலுக்கும், குற்றத்திற்கும் அர்த்தமாக உள்ளது. வேறு எந்த சிறப்பும் கிடையாது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
வாக்காளர் பட்டியல் திருத்தம் மூலமாகவே பாஜக வெற்றி பெற்று வருகிறது. முன்பு மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதைப் போல, பீகார் மற்றும் அசாம் சட்டமன்ற தேர்தல்களிலும் வெற்றி பெற பாஜக முயற்சிக்கிறது.