ஒன்றிய அரசிடமிருந்து கேரளாவுக்கு ரூ.1,148 கோடி நிலுவை
ஒன்றிய அரசிடமிருந்து கேரளா வுக்கு ரூ.1,148 கோடி சமக்ர சிக்சா அபியான் திட்டத்தில் நிலுவைத் தொகை உள்ளதாக அம்மாநில கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டி தெரி வித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறுகையில்,”ஒன்றிய அரசு நிதியுதவி அளிக்கும் திட்டங்க ளுக்காக சமக்ர சிக்சா அபியான் (ஒன்றிய அரசின் கல்வி திட்டம் - எஸ்எஸ்கே) மூலம் கடந்த ஆண்டு ரூ.37,000 கோடி யை ஒன்றிய அரசு விநியோகிக்க வேண்டி யிருந்தது. 2024-25 நிதியாண்டில், மாநிலங்களுக்கு ரூ.27,833 கோடி வழங்கப்பட்டது. இதில், கேரளா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு ஒரு ரூபாய் கூட வழங்கப்படவில்லை. முந்தைய ஆண்டிற்கான நிலுவைத் தொகை உட்பட, ஒன்றிய அரசிடமிருந்து கேரளா பெற வேண்டிய எஸ்எஸ்கே நிதி ரூ.1,148 கோடி ஆகும். இருப்பினும், ஒன்றிய அரசு உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.4,487 கோடியும், குஜராத்திற்கு ரூ.847 கோடியும், ஜார்க்கண்டிற்கு ரூ.1,073 கோடியும் வழங்கியுள்ளது. ஒன்றிய அரசு நிதி அளிக்காமல் கடும் நெருக்கடியை எதிர்கொள்ளும் சிர மங்கள் இருந்தபோதிலும், ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் கல்வி குறியீடுகளில் கேரளா முதல் இடத்தில் இருப்பது மிகுந்த பெருமைக்குரிய விஷயம். எஸ்எஸ்கே கேரளாவின் 6,817 ஊழி யர்களுக்கு மாநில அரசு தற்போது சம்பளம் வழங்கி வருகிறது. அவர்களு க்கு மாதத்திற்கு சுமார் 20 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. கூடுதலாக, மாணவர்களுக்கான சீருடைகள், பாடப் புத்தகங்கள் மற்றும் விடுதிகளுக்கும் மாநில அரசு பணம் செலுத்துகிறது. மேலும் இந்த விஷயங்களைப் பற்றி விவாதிக்க ஒரு மாநாடு நடத்தப்படும்” என அவர் கூறினார்.