states

img

பீகாரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் “வாக்காளர் உரிமை யாத்திரை” நிறைவு

பீகாரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் “வாக்காளர் உரிமை யாத்திரை” நிறைவு

பாட்னா பீகாரில் பாஜகவிற்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் “வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்)” மற்றும் நாடு முழுவதும் அரங் கேற்றப்பட்ட “வாக்குத் திருட்டை” கண்டித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க் கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும், பீகார் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி ஆகிய இருவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் மற்றும் விகாஷீல் இன்ஸான் உள்ளிட்ட “இந்தியா” கூட்டணிக் கட்சியினர் முன்னிலை யில் ஆகஸ்ட் 17ஆம் தேதி  “வாக்காளர் உரிமை  யாத்திரையை (வோட்டர் அதிகார் யாத்திரை)” தொடங்கினர். 14 நாட்கள், 20க்கும் மேற்பட்ட மாவட்டங் கள், 1,300 கி.மீ-க்கும் அதிகமான தூரத்தில் பீகார் முழுவதும் இந்த  “வாக்காளர் உரிமை யாத்திரை” வலம் வந்தது. தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா முதல மைச்சர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக முதல மைச்சர் சித்தராமையா உள்ளிட்ட “இந்தியா” கூட்டணி ஆளும் மாநில முதலமைச்சர்களும், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் உள்ளிட்ட முன்னாள் முதலமைச்சர்களும் இந்த யாத்திரையில் பங்கேற்றனர். இந்த வாக்காளர் உரிமை யாத்திரைக்கு பீகார் மக்கள் அமோக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில், திங்களன்று (செப். 1) பீகார் தலைநகர் பாட்னாவில் பிரம்மாண்ட பொதுக்கூட்ட நிகழ்வுடன் “வாக்காளர் உரிமை யாத்திரை” நிறைவு பெற்றது. பாட்னா வில்  உள்ள அம்பேத்கர் சிலை அருகே நடை பெற்ற நிறைவு பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி, தேஜஸ்வி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சிபிஎம் பொதுச் செய லாளர் எம்.ஏ.பேபி, சிபிஐ பொதுச் செயலாளர் து.ராஜா மற்றும் மூத்த தலைவர் ஆனி ராஜா,  சிபிஐ(எம்-எல்) பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், சிவசேனா (தலைவர்) மூத்த தலைவர் சஞ்சய் ராவத், தேசியவாத காங்கி ரஸ் (சரத்) செயல் தலைவர் சுப்ரியா சுலே,விகா ஷீல் இன்ஸான் தலைவர் முகேஷ் சஹானி, திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் யூசுப் பதான், லலிதேஷ் திரிபாதி, ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட் (காங்கிரஸ்) உள்ளிட்ட தலைவர்கள், லட்சக்க ணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். மல்லிகார்ஜுன கார்கே தொடர்ந்து காந்தி மைதானத்தில் நடை பெற்ற பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில்,”பீகார் வாக்காளர் உரிமை யாத்திரை குறித்து நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டது. யாத்திரையை சீர்குலைக்க பல்வேறு தடைகளை பாஜக உருவாக்கியது. ஆனால் ராகுல் காந்தி, தேஜஸ்வி இதற்கு அஞ்சவில்லை. தடைகளை தகர்த்து தொடர்ந்து கம்பீரமாக யாத்திரை மேற்கொண்டனர். நாட்டில் வாக்குகளையும், பணத்தையும் கொள்ளையடிக்கிறார்கள். பீகாரில் வாக்குகளைத் திருடி வெற்றி பெற மோடி விரும்புகிறார். எச்சரிக்கையாக இல்லா விட்டால் மோடியும் அமித் ஷாவும் உங்களை (பீகார் மக்கள்) மூழ்கடிப்பார்கள். சுதந்தி ரத்திற்குப் பிறகு வழங்கப்பட்ட வாக்குரி மையை இழக்கக்கூடாது. இழக்கவும் விட மாட்டோம். இன்னும் 6 மாதங்களில் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கவிழும்” என அவர் கூறினார். ராகுல் காந்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி,”மகாராஷ்டிராவில் தேர்தல் கொள்ளை யடிக்கப்பட்டுள்ளது.  அங்கு மக்களவைத் தேர்த லுக்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். புதிய வாக்கு கள் அனைத்தும் பாஜகவின் கணக்கிற்குச் சென்றன. ஏனெனில், தேர்தல் ஆணையமும் பாஜகவும் சேர்ந்து வாக்குகளைத் திருடின. ஒரு பகுதியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் இருப்பதை நாங்கள் தெளிவாகக் காட்டினோம். நான்கு மாதங்கள், 16-17 மணிநேரம் வேலை செய்து, அதற்கான ஆதாரத்தை நாட்டின் முன் வைத்தோம். ஆனால் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை வழங்கவில்லை. சிசிடிவியைக் காட்டவில்லை. ஹைட்ரஜன் குண்டு அணு குண்டை விட சக்தி வாய்ந்தது. பாஜகவினர் என்ன வேணாலும் செய்யட்டும். நான் வெளி யிட உள்ள ஆதாரம் ஹைட்ரஜன் குண்டைப் போன்று வெடிக்கும். அதன்பின் பாஜகவின் உண்மை முழு நாட்டிற்கும் தெரியப்போகிறது. குறிப்பாக மோடியால் தனது முகத்தை வெளி யில் காட்ட முடியாது” என அவர் கூறினார். எம்.ஏ.பேபி சிபிஎம் பொதுச் செய லாளர் எம்.ஏ.பேபி பேசு கையில்,”நாட்டில் பாஜக  வாக்குகளை திருடுகி றது. இந்த விஷயம் மக்கள் முன்னிலையில்  வந்துவிட்டது. அதனால் பதற்றமடைந்த நிலையில் உள்ளது பாஜக. ஜனநாய கத்தின் முக்கிய எதிரிகள் பாஜகவினர் தான். பாஜக வாக்குகளை மட்டும் திருடவில்லை. இந்த திருட்டு வேலை மூலம் அரசியலமைப்பு மீதும் தாக்குதல் நடத்துகிறது. அதனால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து நமது வாக்கு ரிமைக்காக போராடி வாக்குரிமையை காப்பா ற்ற வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். தேஜஸ்வி பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி,”ஜனநாயகத்தின் தாய் பீகார் நிலம் ஆகும். பாஜகவினரும், தேர்தல் ஆணையத்து டன் இணைந்து ஜனநாயக நிலத்திலிருந்து, ஜனநாயகத்தை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறார்கள். பீகாரில் தற்போது இரட்டை இயந்திர ஆட்சி உள்ளது. ஒரு இயந்திரம் குற்றத்திலும், மற்றொன்று ஊழலிலும் ஈடு பட்டுள்ளது. வாக்குகள் நீக்கம் மூலம் போலி வாக்குகள் மிகவும் புத்திசாலித்தனமாக சேர்க்கப்படுகின்றன. இந்த வாக்கு திருட்டை பீகார் மக்கள் அனுமதித்தால் ஒட்டுமொத்த நாடும் ஜனநாயகத்தை இழக்கும்” என அவர் எச்சரிக்கை விடுத்தார்.  தீபங்கர் பட்டாச்சார்யா சிபிஐ(எம்-எல்) பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா பேசுகையில்,”நாட்டு மக்கள் புரிந்து கொண்டுவிட்டனர். எவ்வாறு பண மதிப்பிழப்பு மூலம் இந்தியப் பொரு ளாதாரத்தின் முதுகெலும்பை முறித்து விட்டார்கள் என்பதை. அதேபோல “வாக்குத் திருட்டு” மூலம் இந்திய ஜனநாயக அமைப்பை அழிக்க முயற்சி நடக்கிறது. அதனால் தான் பீகாரில் “வாக்காளர் உரிமை யாத்திரை” ஆரம்பித்தோம். அதில் “வாக்குத் திருடன்” என்ற முழக்கங்கள் மூலம் மக்களுக்கு புரிய வைத்தோம். தற்போது பீகார் மக்கள் வாக்குத் திருட்டை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்” என அவர் கூறினார். ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் (ஜேஎம்எம் தலைவர்),”தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அம லாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை போன்ற அமைப்புகளைப் பயன்படுத்தி மக்கள் பிரதிநிதிகளை மிரட்டி இறுதியாக வாக்கு களை திருடுகிறது. இந்த திருட்டு இன்று தான் நடக்கிறது என்றில்லை, பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வந்தது. ஆனால் இப்போது பாஜகவின் திருட்டு பிடிபட்டுவிட்டது. நாட்டின் ஒவ்வொரு பிரிவு மக்களும் இந்த ‘வாக்கு திருடர்களுக்கு’ எதிராக தங்கள் குரலை உயர்த்த வேண்டும். இல்லையெனில் உங்கள் (மக்கள்) வாக்குரிமை பறிக்கப்படும்” என அவர் எச்சரிக்கை விடுத்தார். ஆனி ராஜா  சிபிஐ மூத்த தலைவர் ஆனி ராஜா,”வாக்கு என்பது நமது உரிமை. அது நமக்கு அரசி யலமைப்பில் இருந்து கிடைத்தது. இந்த அரசியலமைப்பு சார்ந்த உரிமையை நாம் பாது காக்க வேண்டும். ஆனால் இந்த வாக்குரி மையை திருடுகிறார்கள். வாக்குத் திருட்டுக்கு எதிரான நமது போராட்டம் தொடரும். மேலும் நாட்டு மக்களுடன் இணைந்து வாக்குத் திருடர்களை அதிகாரத்திலிருந்து கீழே இறக்கி விடுவோம். நாம் போராடுவோம், வெல்வோம்” என அவர் கூறினார். முகேஷ் சஹானி விகாஷீல் இன்ஸான் கட்சித் தலைவர் முகேஷ் சஹானி,”2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலை வாய்ப்புகள் அளிப்பேன், அனைவருக்கும் 15 லட்சம் ரூபாய் தருவேன்,  விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவேன், பிற்படுத்தப்பட்ட வர்க்கத்தின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என வாக்குறுதிகளை அள்ளி வீசினார். ஆனால் அவர் தனது எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. நிறை வேற்றவும் மாட்டார். ஏனெனில் “வாக்குத் திருட்டு” மூலம் தேர்தல்களை வென்றுவிடலாம் என்று அவர் நினைக்கிறார். அதனால் தான் மக்கள் தங்கள் வாக்குரிமையைப் பாதுகாக்க வேண்டும், ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்தார்.