economics

img

ஆகஸ்ட் மாதத்தின் ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.86 லட்சம் கோடி!

ஆகஸ்ட் மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.86 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் வசூலிக்கப்பட்ட ஜி.எஸ்.டி-யை விட 6.5% அதிகமாகும்.

ஒன்றிய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஆகஸ்ட் மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.86 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் வசூலிக்கப்பட்ட ஜி.எஸ்.டி-யை விட 6.5% அதிகமாகும்.

உள்நாட்டு ஜிஎஸ்டி வசூல் 9.6 சதவீதம் அதிகரித்து ரூ.1.37 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது,, அதே நேரத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மூலம் கிடைத்த வரி 1.2 சதவீதம் குறைந்து ரூ.49,354 கோடியாக உள்ளது. மத்திய ஜிஎஸ்டி வருவாய் வசூல் ரூ.31,474 கோடியாகவும், மாநிலங்கள் ரூ.39,736 கோடி மாநில ஜிஎஸ்டியாகவும் வசூலித்துள்ளன.

ஆகஸ்ட் மாதத்தில் நிகர ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.67 லட்சம் கோடியாக உள்ளது. இது ஆண்டுக்கு ஆண்டு 10.7 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஜிஎஸ்டி ரீஃபண்ட்ஸ் ஆண்டுக்கு ஆண்டு 20 சதவீதம் குறைந்து ஆகஸ்ட் மாதத்தில் ரூ.19,359 கோடியாக குறைந்துள்ளது.