இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பருத்தி மீதான வரி விலக்கை டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு ஏற்கெனவே 11 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்பட்டு வந்தது. அதுதவிர, வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி வரியும் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை சுங்க வரி இல்லாமல் பருத்தியை இறக்குமதி செய்வதற்கான அறிவிக்கையை ஒன்றிய அரசு கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதியன்று வெளியிட்டது.
இதனிடையே, இந்திய பொருட்களுக்கு அமெரிக்காவில் 50% வரி விதிப்பு கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதை தொடர்ந்து, பருத்தி மீதான இறக்குமதி வரி விலக்கை டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.