tamilnadu

img

குளித்தலை சிபிஎம் அலுவலகத்தில் சாதி மறுப்பு திருமணம்!

குளித்தலையில் உள்ள சிபிஎம் அலுவலகத்தில் காதலர்களுக்கு சாதி மறுப்பு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில்  காதலர்கள் லோகநாதன் - சுவேதா  ஆகியோருக்கு சாதி மறுப்பு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.  
மேலும் சாதி மறுப்பு திருமணம் செய்த இந்த தம்பதிக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி குளித்தலை  காவல் நிலையத்தில் சிபிஎம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது