முண்டக்கையில் புதிய வாழ்க்கை துளிர்க்கிறது முதல் கட்ட வீடுகளை மக்களுக்கு ஒப்படைத்தார் பினராயி
பேரிடரால் பாதிக்கப்பட்ட சூரல்மலையைச் சேர்ந்த சிறுமி நைசாமோள், முதலமைச்சர் பினராயி விஜயனை வரவேற்க மேடைக்கு வந்தார்.
கல்பற்றா, மார்ச் 2- வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் வீடு உள்ளிட்ட மொத்த வாழ்வாதாரத்தையும் இழந்த முண்டக்கை மக்களுக்கு புதிய வாழ்க்கை துளிர்க்கிறது. கல்பற்றாவில் சிபிஎம் தலை மையிலான இடதுசாரி அரசாங்கம் கட்டிய வீடுகளை மக்களுக்கு ஒப்படைத்தார் முதல்வர் பினராயி விஜயன். 2024 ஜூலை மாதம் கேரள மாநிலம் முண் டக்கை சூரல்மலையில் பொழிந்த பெருமழை வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் அப்பகுதி மக்களின் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. பலர் குடும்ப உறுப்பினர்களையும் இழந்தனர். இந்த நிலச்சரிவில் வீடுகள் மற்றும் நிலத்தை முற்றிலுமாக இழந்தவர்களில் முதல் கட்ட பட்டியலில் உள்ள 178 குடும்பங்களுக்கு கேரள அரசால் கட்டப்பட்டுள்ள வீடுகள் ஒப்படைக்கப் பட்டன. ஒரு குடும்பம் ஆரோக்கியமாகவும் மகிழ்வா கவும் வாழ்வதற்கு தேவையான வசதிகள் கொண்ட 1,000 சதுர அடி வீட்டுடன், ஏழு சென்ட் நிலத்துக்கான பட்டாக்கள் வழங்கப்பட உள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்ட தேவையான நிதியை ஒன்றிய பாஜக அரசு தராமல் பழிவாங்கிய நிலையில் கேரள அரசின் முன்முயற்சியால் துவங்கப்பட்ட கட்டுமானப் பணிகள் 320 ஆவது நாளில் முதல் கட்ட வீடு களின் பணிகள் நிறைவடைந்துள்ளன. சூரல்மலையின் நிலச்சரிவில் எல்லா வற்றையும் இழந்தவர்களின் விருப்பம் மீண்டும் ஒன்றாக வாழ வேண்டும் என்பதுதான். இடது சாரி அரசாங்கம் அதற்கு உறுதுணையாக நின்றது. சாத்தியமற்றதை சாத்தியமாக்கும் மன உறுதியே இதற்கு காரணம். சுற்றுச்சுவர், வாயில், 11.42 கி.மீ சாலை, நிலத்தடி மின்சாரம், நீர் வழங்கல் வலைய மைப்பு, குடிநீர்த் தொட்டி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், சூரிய மின் தகடுகள், பசுமைச் சூழலுடன் மக்களின் நல்வாழ்வுக்காக தயா ராக உள்ளன. 64.47 ஹெக்டேர் பரப்பளவில் 410 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. அடித்தளம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அனைத்து வீடுகளும் ஏப்ரல் மாதத்திற்குள் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் ஒரு சுகாதார மையம், அங்கன்வாடி, சமூக மையம், பொதுச் சந்தை, நிலச்சரிவு நினைவுச்சின்னம், திறந்தவெளி அரங்கம், பல்நோக்கு மண்டபம், நூலகம், விளையாட்டு மைதானங்கள், துணை மின் நிலையம் போன்றவையும் கட்டப்படும். ஊராளுங்கள் தொழிலாளர் ஒப்பந்த சங்கத்து டன் ஒப்பந்தம் மூலம் இந்த புதிய பகுதிக்கான (நகரின்) கட்டுமானங்களுக்கு ரூ.299 கோடி செல விடப்படுகிறது.
