ஈரான் மீதான தாக்குதல் : அரிசி, தேயிலை ஏற்றுமதி கடும் பாதிப்பு
புதுதில்லி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் மிகக்கொடூர மான தாக்குதலை நடத்தி வரும் நிலையில் இந்தியாவின் ஏற்றுமதியும் கடும்பாதிப்பை எதிர் கொண்டுள்ளது. குறிப்பாக இந்திய பாசுமதி அரிசியின் மிகப்பெரிய சந்தை யாக ஈரான் உள்ள நிலையில் ஏற்றுமதியாளர்கள் கடும் அழுத் தத்திற்கு உள்ளாகியுள்ளனர். பாசுமதி அரிசி வர்த்தகம் முடக்கம் அகில இந்திய அரிசி ஏற்றுமதி யாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளரும், ‘பார்ச்சூன் ரைஸ்’ நிறுவனத்தின் இயக்குநருமான அஜய் பலோடியா தனியார் செய்தி நிறுவனத்திற்கு கொடுத்துள்ள பேட்டியில், போர் துவங்குவதற்கு முந்தைய இரண்டு மாதங்களில், ஈரான் இறக்குமதியாளர்கள் இந்தியாவிலிருந்து அதிக அளவில் பாசுமதி அரிசியை ஆர்டர் செய்திருந்தனர். இதன் காரண மாக, இந்திய உள்ளூர்ச் சந்தைக ளில் பாசுமதி அரிசி விலை கிலோ வுக்கு சுமார் ரூ.10 வரை உயர்ந்தி ருந்தது. போர் தொடங்கியதில் இருந்து, இந்திய பாசுமதி அரிசி ஏற்றுமதி முற்றிலும் முடங்கியுள்ளது. ஏற்கெனவே இந்தியாவிலிருந்து ஈரானுக்கு அனுப்பப்பட்ட அரிசி மூட்டைகள் அந்நாட்டை சென்ற டைய முடியாமல் இடையிலேயே உள்ளன. தற்போதைய சூழலில் ஈரான் இறக்குமதியாளர்களால் அந்த சரக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியுமா என்பதில் பெரும் சிக்கல் நீடிக்கிறது என குறிப்பிட்டுள்ளார். ஏற்றுமதியாளர்கள் சங்கத் தரவு இந்தியாவின் ஒட்டுமொத்த பாசுமதி அரிசி ஏற்றுமதியில் பெரு மளவு ஈரான் மற்றும் இராக்கிற்கே செல்லும் நிலையில் தற்போதைய போர் ஒரு புதிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது. அகில இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கத் தரவுப்படி கடந்த ஆண்டு ஈரானுக்கு ரூ.10,968 கோடி ரூபாய் மதிப்பிலான (ஏற்றுமதியில் 25 சதவிகிதம்) பாசுமதி அரிசியும் இராக்கிற்கு 8,774.4 கோடி ரூபாய் (ஏற்றுமதியில் 20 சதவிகிதம்) மதிப்பிலான பாசுமதி அரிசி என மொத்தம் 20 லட்சம் டன்னுக்கும் அதிகமாக 18,280 கோடி ரூபாய்க்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. தற்போதைய போரால் இராக் மற்றும் மேற்கு ஆசிய நாடுகள் முழுமைக்குமான இந்திய அரிசி ஏற்றுமதி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. தேயிலை ஏற்றுமதியிலும் சரிவு அரிசி மட்டுமல்லாது, இந்தி யாவிலிருந்து ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தேயிலையும் இந்த முறை கடும் வீழ்ச்சியைச் சந்திக்கும் எனக் கருதப்படுகிறது. 2024-25 நிதியாண்டில் மட்டும் சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பிலான தேயிலை இந்தியாவி லிருந்து ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. போர் தொடங்குவதற்கு முன்பே, ஈரானின் உள்நாட்டு அரசி யல் சூழல் இந்திய ஏற்றுமதியைப் பாதிக்கத் தொடங்கி இருந்தது. எனினும் ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது அமெரிக்கா கூடுதலாக 25 சதவிகிதம் வரி விதிப்பதாகக் கடந்த மாதம் அறி வித்தது. இதனால் வர்த்தக உறவு பாதிப்படைந்தது. மேலும் போர்ச் சூழல் அமெரிக்காவின் நீண்டகால பொருளாதாரத் தடை உள்ளிட்ட பல காரணங்களால் ஈரானின் கரன்சியான ‘ரியால்’ (Rial) மதிப்பு 50 சதவிகிதம் சரிந்தது. இது அந்நாட்டு மக்களின் வாங்கும் திற னைப் பெருமளவு குறைத்துள் ளது. பாதிப்பை ஈடுகட்டுவாரா மோடி இந்தப் போரில் நீண்டகால நட்பு நாடான ஈரானை கைவிட்டு இனப்படுகொலை குற்ற வாளிகளான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் மோடி கைகோர்த்து நிற்கும் சூழலில் அவரது தலைமையிலான அரசு இந்திய ஏற்றுமதியாளர்கள் எதிர் கொள்ளும் பாதிப்பை சரி செய்யுமா, மாற்று சந்தையை உறுதிப்படுத்தி தருமா அல்லது அவர்களை கைவிட்டு விடுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
