கேரள அமைச்சர் மீது தாக்குதல்: கண்டித்து ஆர்ப்பாட்டம்
கேரளம் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் மீது தாக்குதல் நடத்திய கேரள காங்கிரஸ் குண்டர்களை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வடசென்னை மாவட்டக்குழு சார்பில் திருவொற்றியூரில் மாவட்டத் தலைவர் வி.ஏ.பிரீத்தா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.பாக்கியலஷ்மி, எம்.கோட்டீஸ்வரி, பி.அலமேலு, மாவட்ட நிர்வாகிகள் டி.சிந்து, எஸ்.பூங்குழலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
