states

img

பிரதமர் மோடி - கனடா பிரதமர் மார்க் கார்னி சந்திப்பு முக்கிய ஒப்பந்தங்களில்  கையெழுத்து

பிரதமர் மோடி - கனடா பிரதமர் மார்க் கார்னி சந்திப்பு முக்கிய ஒப்பந்தங்களில்  கையெழுத்து

இந்தியாவிற்கு அரசுமுறை பயண மாக வருகை தந்துள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி பிரதமர் மோடி இருவரும் சந்தித்துள்ளனர். ஹர்தீப் சிங் நிஜார் கொலைக்கு பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்து வந்தன. இந் நிலையில் திருநாட்டின் தலைவர்களின் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.  இந்த சந்திப்பை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு தற்போது புத்துயிர் பெற்றுள்ளதாக மோடி தெரிவித்தார்.  கடந்த ஓராண்டில் இந்தியா-கனடா அரசுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இணக்கமானது , கடந்த இருபது ஆண்டு களில் ஏற்பட்டதை விட அதிகம். இது வெறும் உறவு புதுப்பித்தல் மட்டுமல்ல, புதிய லட்சியம் மற்றும் தொலை நோக்குப் பார்வையுடன் கூடிய ஒரு மதிப்புமிக்க கூட்டணியின் விரிவாக்கம் என மார்க் கார்னி பேசியுள்ளார். பொருளாதார இலக்கு  இந்தியாவின் நிதித் தலைநகரான மும்பையில் தனது பயணத்தைத் தொடங்கிய மார்க் கார்னி, இந்தியாவுட னான  புதிய பொருளாதார மற்றும் வர்த்த கக் கூட்டாண்மைகளை உருவாக்கு வதில் உறுதியாக உள்ளார். இதனை உறுதி செய்யும் வகையில் 2030-க்குள் இருதரப்பு வர்த்தகத்தை 50 பில்லியன் டாலராக (சுமார் ₹4.5 லட்சம் கோடி) உயர்த்துவதே இருநாடுகளின் இலக்கு என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அதேபோல ‘விரிவான பொருளா தாரக் கூட்டாண்மை ஒப்பந்தத்தை’ (Comprehensive Economic Partne rship Agreement - CEPA) விரைவில் இறுதி செய்ய இரு தலைவர்களும் முடிவு செய்துள்ளனர்.  இந்த சந்திப்பில் புதிய தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகளில் இரு நாடு களும் இணைந்து செயல்படுவது, பசுமை ஆற்றல் மற்றும் சூரிய மின்சக்தி மேம்பாட்டிற்கான ஒத்துழைப்பு. இந்தி யாவின் அணுசக்தித் தேவைகளுக்காக யுரேனியம் விநியோகம் மற்றும் நவீனத் தொழில்துறைகளுக்கான முக்கியத் தாதுக்கள் (Critical Minerals) தொ டர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி யுள்ளன.