பத்திரிகையாளர் சுஷாந்த் சிங்
அமெரிக்கா-இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையை ஆதரிப்பது, தற்போதைய ஈரான் ஆட்சி ஒருவேளை தப்பிப் பிழைக்குமானால், அதனுடன் கொண்டுள்ள உறவில் விரிசலை ஏற்படுத்தும். மேலும் இப்பிராந்தியத்தில் ரஷ்ய மற்றும் இந்திய நலன்களுக்கு இடையே ஒரு பிளவை உருவாக்கக்கூடும். ஆனால், மோடி ஏற்கெனவே அந்த முடிவை எடுத்துவிட்டாரல்லவா?
பத்திரிகையாளர் சுஹாசினி ஹைதர்
இஸ்ரேல் தாக்குதல்களைத் திட்டமிட்டபோது பிரதமர் மோடியை இஸ்ரேலுக்கு அழைத்தது இராஜதந்திர விதிமுறைகளை முற்றிலும் மீறும் செயலாகவும் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானை தாக்குவதற்கான உளவுத்துறை விவரங்களை இறுதி செய்த போது, மோடி வருகை யை ஒரு திரையாகவும் பயன்படுத்திக் கொண்டன.
பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய்
மேற்கு ஆசியாவில் நடக்கும் போரில் இந்தியா ஒரு தரப்பை தேர்ந்தெடுத்துள்ளது. பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம், ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்துடன் ஒற்றுமையை வெளிப்படுத்தியது மற்றும் அலி காமேனியின் மரணம் குறித்து மௌனம் சாதிப்பது ஆகியவை இந்தியா அமெரிக்க-இஸ்ரேல் கூட்டணி என்ற புள்ளியில் உள்ளது என்பதற்கான தெளிவான அறிகுறிகளாகும்.
திரிணாமுல் எம்.பி., மஹூவா மொய்த்ரா
ஈரானில் உள்ள சிறு பள்ளிக் குழந்தைகள் மீது குண்டுவீச அமெரிக்கா வரிப் பணத்தைப் ்பயன்படுத்துகிறது. அதே நேரத்தில் சுகாதாரத்துக்கான நிதி குறைக்கப் பட்டுள்ளதால், அந்நாட்டு மக்கள் இன்சுலின் வாங்க நிதி உதவி கேட்டு வருகின்றனர். இதனை சிந்தித்துப் பாருங்கள்.
