திருவள்ளூரில் சிபிஎம் தேர்தல் நிதியாக ரூ.21.25 லட்சம் வழங்கப்பட்டது
திருவள்ளூர், மார்ச் 2 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் வசூலிக்கப்பட்ட தேர்தல் நிதி 21 லட்சத்து 25 ஆயிரத்து 700 ரூபாயை, கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணனிடம் மாவட்ட நிர்வாகி கள் வழங்கினர். பாஜக அரசின் தொழிலாளர் விரோதச் சட்டம், 100 நாள் வேலைதிட்ட சட்டத்திருத்தம், விவசாய விரோத விதைச் சட்டம் மற்றும் வர்த்தக ஒப்பந்தம் போன்ற மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து, கடந்த பிப்ரவரி 24 செவ்வாயன்று திருவள்ளூரில் அரசியல் விளக்க மற்றும் தேர்தல் நிதியளிப்புப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு கட்சியின் திருவள்ளூர் வட்டச் செயலாளர் எஸ்.கலை யரசன் தலைமை தாங்கினார். வட்டக்குழு உறுப்பினர் எம்.சின்னராசு அனைவரையும் வரவேற்றார். மாநிலக்குழு உறுப்பினர் ஐ.ஆறுமுகநயினார், மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், பி.துளசிநாராயணன், ஜி.சம்பத், ஏ.ஜி.கண்ணன், ஆர்.தமிழ்அரசு, இ.மோகனா, மாவட்டக்குழு உறுப்பினர் என்.கீதா, மூத்த தோழர் ப.சுந்தரராசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். வட்டக்குழு உறுப்பினர் எம்.உதயநிலா கூட்டத்தின் நிறைவாக நன்றி கூறினார். நிகழ்வின் போது அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணனுக்கு ரூபாய் நோட்டு மாலை அணிவித்து மரி யாதை செய்யப்பட்டதுடன், மேடையில் இருந்த அனைத்துத் தலைவர்களுக்கும் நெறிக்குறவ மக்கள் தாங்கள் தயாரித்த பாசிமணிமாலைகளை அணிவித்து கவுர வித்தனர். தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பிலும், இடைக்கமிட்டி மற்றும் கிளைச் செயலாளர்கள் சார்பிலும் தேர்தல் நிதி வழங்கப்பட்டது.
