states

img

பாஜக ஆளும் ஒடிசாவில் கொடூரம் வேலை வாங்கித் தருவதாக இளம் பெண் கும்பல் பலாத்காரம்

பாஜக ஆளும் ஒடிசாவில் கொடூரம் வேலை வாங்கித் தருவதாக இளம் பெண் கும்பல் பலாத்காரம்

புவனேஸ்வரம் ஒடிசா மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்த பின்பு பெண்களு க்கு எதிரான பாலியல் வன்மு றைச் சம்பவங்கள் மிக மோசமான அளவில் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தின் உடாலா அருகே பாங்கிர்போசி பகுதியைச் சேர்ந்த  22 வயது இளம் பெண்ணிடம் செல் போனில்,”நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை இருக்கிறது. அதுபற்றி பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம். சொல்லும் இடத்திற்கு வர வேண்டும்” என கூறி 2 பேர் அழைத்துள்ளனர்.  இதனை நம்பி வெள்ளிக்கிழமை அன்று மாலை இளம்பெண் அழைத்த இடத்திற்கு சென்றுள்ளார். வேறு இடத்தில் நேர்காணல் நடைபெறுகிறது என்று கூறி, பெண்ணை காரில் அழைத்து சென்றுள்ளனர். காரில் இருந்தவர்கள் வேலை பற்றி எதுவும் பேசாமல் இருந்துள்ளனர். பெண்ணின் வீட்டில் இருந்து 80 கி.மீ., தொலைவில் உடாலா காவல் நிலை யத்திற்கு உட்பட்ட பகுதிக்கு அவர்கள் சென்ற போது, காரில் மேலும் 3 பேர் ஏறியுள்ளனர். உடாலா மற்றும் பாலசோர் நகரங்க ளுக்கு இடைப்பட்ட வனப்பகுதிக்கு இழுத்துச் சென்று 5 பேர் கொண்ட கும்பல் இளம் பெண்ணை பலாத்காரம் செய்துள்ளது. சம்பவத்திற்கு பின்னர் அக்கும்பல் பெண்ணை காரில் இருந்து சாலையில் தூக்கி வீசி விட்டுச் சென்றது. இளம் பெண் படுகா யத்துடன் நடக்க முடியாமல் மற்ற வர்களின் உதவியோடு உடாலா காவல்நிலையத்தில் புகார் அளித்துள் ளார். பெண் அளித்த புகார் அடிப்ப டையில் 2 பேர் கைது செய்யப்பட்டுள் ளதாகவும், தலைமறைவாக உள்ள 3 பேரை தேடும் பணி நடைபெற்று வரு வதாகவும் உடாலா சிறப்பு காவல் துறை உயரதிகாரி ரிஷிகேஷ் நாயக் தெரி வித்துள்ளார்.