tamilnadu

img

பள்ளியில் பாலியல் வன்முறையை கண்டித்து எஸ்எஃப்ஐ ஆர்ப்பாட்டம்

பள்ளியில் பாலியல் வன்முறையை  கண்டித்து எஸ்எஃப்ஐ ஆர்ப்பாட்டம்

விழுப்புரம், செப்.1- விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளில் தொடர்ந்து  நடந்து வரும் பாலியல் வன்முறை சம்பவங்களை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  விழுப்புரம் திருவிக வீதி, காந்தி சிலை அருகில் உள்ள அரசு மாதிரி மகளிர் பள்ளியில் பயிலும் 6 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் சீண்ட லில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர் பால் வின்சன்ட்டை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த னர். இச்செயலை கண்டித்தும், தமிழ கத்தில் தொடர்ந்து வரும் பாலியல் வன்முறை சம்பவங்களை எதிர்த்தும் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மு.ஜீவானந்தம், மாவட்ட துணை செய லாளர் உ.தீபன் மற்றும் மாவட்டகுழு உறுப்பினர்கள், கல்லூரி மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.