15வது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் காத்திருப்பு
அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை 15 ஆவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (சிஐடியு) மற்றும் அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற ஊழியர்கள் நல அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் போராட்ட களத்திற்கு சென்று வாழ்த்திப் பேசினார். அப்போது ஏராளமானோர் உடனிருந்தனர்.