நான்காவது முறையாக மீண்டும் கவிழ்ந்தது பிரான்ஸ் அரசு : ஜனாதிபதி மக்ரோனும் பதவி விலக வலியுறுத்தல்
பாரீஸ், செப்.9- பிரான்ஸ் பிரதமர் பிரான்சுவா பைரூ நம்பிக் கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததால் தனது பதவியை இழந்துள்ளார். இதனால் நான் காவது முறையாக மீண்டும் அந்நாட்டில் அரசு கவிழ்ந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் நிர்ணயித்துள்ள உச்ச வரம்பான மூன்று சதவீதத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக பிரான்சில் நிதிப்பற்றாக்குறை நிலவி வருகிறது. மேலும் அந்நாட்டின் கடன் சுமை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 114 சதவீத மாக உள்ளது. பிரான்ஸ் அரசின் கடன் “உயி ருக்கு அச்சுறுத்தல்” ஏற்படுத்தும் அளவுக்கு அதி கரித்துவிட்டதாக அவர் கூறி இருந்தார். இதனால் நாட்டின் கடனைக் குறைக்க சுமார் 52 பில்லியன் டாலர்கள் அளவுக்குச் செலவுக ளை குறைப்பது என்ற பெயரில் பல திட்டங்களுக்கு நிதி வெட்டுக்களை அமல்படுத்தும் பைரூவின் மசோதா மீது செப்.8 திங்களன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பில் அவருக்கு ஆதரவாக 194 வாக்கு களும், எதிராக 364 வாக்குகளும் பதிவாகின. மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பிலும் அவர் தோல்வியுற்றார். இது பிரான்சில் அரசியல் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஐந்தாவது பிரதமரைத் தேடும் பணியை துவங்கியுள்ளார். தீவிர இடதுசாரிக் கட்சியான ‘ஃபிரான்ஸ் அன்பவ்டு’ (France Unbowed) கட்சியின் தலை வர் ஜீன்-லுக் மெலன்ஷோன், “மக்ரோன் இப்போது மக்களுக்கு எதிராக உள்ளார். அவரும் பதவி விலக வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 577 உறுப்பினர்களைக் கொண்ட பிரான்ஸ் நாடாளுமன்றத்திற்கு கடந்த ஆண்டு நடை பெற்ற தேர்தலில் இடதுசாரி கூட்டணியே பெரும் பான்மை இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் தனியாக அரசாங்கத்தை அமைக்கும் அளவுக்குப் போதிய ஆதரவு இல்லை. இடதுசாரிகள் கையில் ஆட்சி சென்று விடக் கூடாது என லீ பென் தலைமையிலான தீவிர வலதுசாரி கட்சியான தேசிய பேரணி கட்சியும், மக்ரோனின் மறுமலர்ச்சிக் கட்சியும் பல நெருக்க டிகளை கொடுத்தன. ஜனாதிபதியாக உள்ள மக்ரோன் இடதுசாரிகளை தவிர்த்து மைய-வலது சாரி கட்சி அல்லது வலதுசாரிக் கட்சியை சேர்ந்த வர்களையே பிரதமர்களாக நியமித்து வருகிறார். தற்போதும் அதையே மக்ரோன் தொடர்வார் எனவும் கூறப்படுகிறது. மேலும் மக்களிடையே ஏற்கனவே உள்ள அதிருப்தியும் விரக்தியும் அதிகரித்து ஒரு மோச மான அரசியல் முடக்கத்தை பிரான்ஸ் சந்திக்கும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.