world

img

தீக்கதிர் உலக செய்திகள்

கயானா ஜனாதிபதியாக   இா்ஃபான் அலி பதவியேற்பு 

தென் அமெரிக்க நாடான கயானாவின் ஜனாதிபதியாக இா்ஃபான் அலி இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ளார். கடந்த வாரம் நடைபெற்ற தோ்தலில் அவா் வெற்றி பெற்றதாக அந்நாட்டு தோ்தல் ஆணையம் அறிவித்தது. மொத்தமுள்ள 65 இடங்களில் 36 இடங்கள் இா்ஃபான் அலி தலைமையிலான மக்கள் முன்னேற்றக் கட்சி வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நாடு வேகமாக வளரும் நாடாகவும் எண்ணெய் வளம் மிகுந்த நாடாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

பாகிஸ்தானில் வெள்ள அபாயம்:  25,000 போ் வெளியேற்றம் 

பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகா ணத்தின் ஆறுகளில் வெள்ளம் ஏற் பட்டுள்ளதால் 25,000-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப் பட்டுள்ளனா். வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருவதாகவும் குறிப்பாக கட்டடங்களுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்க வெப்ப உணா்வு டிரோன்களைப் பயன்படுத்தி மீட்டு வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் முதல் கனமழை காராணமாக 41 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஐரோப்பிய ஆணைய தலைவர்  மீது நம்பிக்கை இல்லை  

ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவரான உர்சுலா வான் பதவியை விட்டு  விலக வேண்டும் என்று பெரும்பாலான ஐரோப்பியர்கள் விரும்புவதாக கிளஸ்ட்டர்17 என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் மற்றும் போலந்து ஆகிய நாடுகளில் அந்நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் சுமார் 60 சதவீதமான மக்கள் உர்சுலா மீது நம்பிக்கை இல்லை எனவும் அவர் பதவி விலக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். 

நைஜீரியாவில்  பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை 

நைஜீரியாவில் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 23 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் கட்ஸினா மாநிலத்தின் 26 நபர்களை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர். அவர்களை மீட்பதற்காக தாக்குதலை முன்னெடுத்த ராணுவம் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாப்பாக மீட்டுள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் நேட்டோ கூட்டமைப்பினால், ஆப்பிரிக்க நாடுகளில் உருவாக்கப்பட்ட பயங்கரவாத அமைப்புகளால் ஆப்பிரிக்க மக்கள் தொடர் துன்பங்களை சந்தித்து வருகின்றனர். 

பிரிட்டனை கண்டித்து  மக்கள் போராட்டம் 

இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்கி வருவ தைக் கண்டித்தும் அதனை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியும் 300 க்கும் மேற் பட்ட மக்கள் பாலஸ்தீன கொடிகளை ஏந்தி பிரிட்ட னில் போராட்டம் நடத்தியுள்ளனர். லண்டனில் நடைபெறும் ஆயுத கண்காட்சியில் சுமார் 51 இஸ்ரேல் ஆயுத நிறுவனங்கள் பங்கேற்க உள்ள நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள் ளது. இனப்படுகொலை மூலம் லாபம் ஈட்டாமல் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக இஸ்ரேல் மீது விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.