states

img

நாடாளுமன்ற மசோதாவை கிடப்பில் போட முடியுமா? குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு  உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

நாடாளுமன்ற மசோதாவை கிடப்பில் போட முடியுமா? குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு  உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்க ளில் ஆளுநர் மூலம் பாஜக குடைச்சல் கொடுத்து வருவது நாட்டு மக்கள் அறிந்தது தான். குறிப் பாக மாநில சட்டமன்றத்தில் நிறை வேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்பு தல் அளிக்காமல், இழுத்தடிக்கும் ஆளு நர்களுக்கு எதிரான வழக்கு உச்சநீதி மன்றத்தில் செவ்வாய்க்கிழமை அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  உச்சநீதின்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதிகள் சூர்ய காந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல் எஸ்.சந்துர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கர்நாடகா மற்றும் கேரள அரசுகள் சார்பில் வாதங்கள் முன்வைக் கப்பட்டன. கர்நாடகா சார்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணி யம், கேரளா சார்பில் மூத்த வழக்கறிஞர்  கே.கே.வேணுகோபால் ஆகியோர் ஆஜராகினர். கேரளா சார்பில் ஆஜரான வழக்கறி ஞர் கே.கே.வேணுகோபால்,“சட்ட மன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப் படும் மசோதாக்களுக்கு ஆளுநர் உட னடியாக ஒப்புதல் வழங்க வேண்டும். மசோதாக்களை நிறுத்தி வைக்க குடி யரசுத் தலைவருக்கும், ஆளுநர்களுக் கும் எந்த தனி அதிகாரமும் இல்லை. அரசுடன் நெருங்கிய உறவு வைத்துள்ள ஆளுநர்கள் உடனடியாக மசோதாக்க ளுக்கு ஒப்புதல் வழங்குகின்றனர். மற்ற மாநிலங்களில் ஒப்புதல் வழங்குவ தில்லை. மசோதாக்களுக்கு ஆளுநர்கள் உடனடியாக ஒப்புதல் வழங்காததால், நீதிமன்றத்தை நாட வேண்டி உள்ளது. ஒன்றிய அமைச்சரவை முடிவுப்படி எப்படி குடியரசுத் தலைவர் செயல்படுகிறாரோ, அதேபோல், மாநில அமைச்சரவைகளின் முடிவுப்படி ஆளுநர் செயல்பட வேண்டும் என்பதுதான் விதி. மசோதா நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணத்தை ஆளுநர்கள் தெரிவிக்க வேண்டும். அது நீதித்துறை ஆய்வுக்கு உட் பட்டது. சட்டமன்றத்தின் செயல்பாட்டை ஆளுநர்கள் சீர்குலைக்க முடியாது. ஆளுநர் சட்டமன்றத்துக்கு எதிராக செயல்பட முடியாது. ஆளுநர்கள் கோ புரத்தில் உட்கார்ந்து கொண்டு மசோதா வை படிக்க பல மாதங்கள் எடுத்துக் கொள்ள முடியாது” என அவர் வாதிட்டார். குட்டு தொடர்ந்து கர்நாடக அரசின் வழக்க றிஞர் வாதிட்டார். அவரது வாதத்திற்குப் பின்பு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்,”குடியரசுத் தலைவர் மசோதாவை திருப்பி அனுப்பும் போது, நாடாளுமன்றம் மறுநிறைவேற்றம் செய்து மீண்டும் அனுப்பினால் அதை கிடப்பில் போட முடியாது. ஒப்புதல் கொடுத்தேதான் ஆக வேண்டும். அதே வழிமுறைதானே ஆளுநருக்கும் உள்ளது?” என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து புதன்கிழமைக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.