அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கும் புதுமைப் பெண் திட்டம்
சென்னை, செப்.9- தமிழகத்தில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவி களுக்கு மாதந்தோறும் ரூபாய் 1,000 உதவித்தொகை வழங்கும் திட்டமே புதுமைப் பெண் திட்டம். மூவலூர் இராமாமிர்தம் அம்மை யார் உயர்கல்வி உறுதித் திட்டம் என்று அழைக்கப்படும் இந்த திட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து சமூக நீதி மற்றும் சமத்துவம் நிறைந்த சமுதாயத்தை கல்வி கற்ற பெண் களால் மட்டுமே உருவாக்க முடியும் என்ற நோக்கத்துடன் தமிழக அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்வியில் சேரும் மாணவர்கள், முத லாம் ஆண்டு சேர்ந்த பின்னர், இந்த திட்டத்துக்கான இணையதளம் வாயி லாக விண்ணப்பிக்கலாம். பஞ்சாயத்து யூனியன் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், மாநகராட்சி பள்ளி கள், பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினர் பள்ளிகள், பிற்படுத்தப் பட்டோர் நல பள்ளிகள், மாற்றுத்திற னாளிகள் நலத்துறை பள்ளிகள், வனத் துறை பள்ளிகள், சமூக பாதுகாப்புத் துறை பள்ளிகள் ஆகியவற்றில் பயிலும் மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் பயன டையலாம். கலை, அறிவியல், தொழில்முறை படிப்புகள், துணை மருத்துவம், டிப்ள மோ, ஐடிஐ, இளநிலை மற்றும் முது நிலை இணைந்த படிப்புகள் ஆகிய வற்றில் மேற்படிப்பை தொடர விரும்பும் மாணவியருக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும். ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவியர் இருந்தாலும் இந்த திட்டத்தின்கீழ் உதவி பெறலாம். வேறு திட்டங்களின் கீழ் நிதியுதவி பெறும் மாணவியரும் கூடுதலாக இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறலாம். இத்திட்டத்திற்கென புதிய மறு சீரமைக்கப்பட்ட வலைதளம் https://www.pudhumaipenn.tn.gov.in உரு வாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2022 ஆம் ஆண்டு முதல் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.