15 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் சிஐடியு சார்பில் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிதியளிப்பு திருவண்ணாமலையில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் கோரிக்கைகளுக்காக 15 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்தநிலையில், மாவட்ட பட்டு கைத்தறி நெசவாளர்கள் சங்கம், திருவண்ணாமலை தையல் கலை தொழிலாளர் சங்கம் சார்பில் போக்குவரத்து கழக ஊழியர் சங்க நிர்வாகிகளிடம் ஆதரவு நிதி வழங்கினர். இதில் கைத்தறி நெசவாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் எம். வீரபத்திரன், தையல் கலை தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கெளரி, சி.எஸ் மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.