india

img

வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இந்தப் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும் என்றும், வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசாவை நோக்கி செல்லும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில், செப். 7 ஆம் வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.