வரலாற்றை விஷமாக்க முயலும் விபரீதம்
புதிய கல்விக் கொள்கையின் கீழ் வடிவமைக் கப்படும் பாடத்திட்டம் ஆர்எஸ்எஸ் அவிழ்த்து விடும் கட்டுக்கதைகளுக்கு வரலாற்றுச் சாயம் பூசும் வகையிலும், இந்தியாவின் பன்மைத் தன்மைக்கு வேட்டு வைக்கும் வகையிலும், வர லாற்றை திரித்து எழுதும் நோக்கத்திலும் அமைந்து வருகிறது.
தேசிய கல்விக்கொள்கை மற்றும் தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்ப டையில் பள்ளிக் கல்விக்கான புதிய புத்தகங்க ளை என்சிஇஆர்டி தயாரித்துள்ளது.
8ஆம் வகுப்புக்கான புதிய சமூக அறிவியல் பாடப் புத்தகத்தை என்சிஇஆர்டி சமீபத்தில் வெளி யிட்டுள்ளது. இதில் அக்பர், பாபர், அவுரங்கசீப் ஆகியோர் கொடுங்கோலர்கள் என்றும், இந்துக்க ளுக்கு எதிராக கொடுமை இழைத்தவர்கள் என்றும் எழுதப்பட்டுள்ளது. இந்தப் பகுதி வர லாற்றின் இருண்ட பக்கங்கள் என்றும் குறிப்பி டப்பட்டுள்ளது.
இத்தகைய சித்தரிப்புகள் ஆர்எஸ்எஸ் நடத்தும் பயிற்சிகளில் சொல்லப்பட்டு வந்த நிலை யில், ஒன்றிய அரசு தயாரிக்கும் பாடத்திட்டங்களி லேயே இடம் பெற்றிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.
பாபர் மக்களை அழித்து அவர்களின் மண்டை ஓடுகள் மீது தன் சாம்ராஜ்ஜியத்தை நிறுவியதாக வும், அக்பரின் ஆட்சி கொடூரம் நிறைந்தது என்றும், அவுரங்கசீப் ஆட்சியில் கோவில்கள், குருத்வாராக்கள் அழிக்கப்பட்டன என்றும் எழு தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்து மன்னர்க ளைப் பற்றி எழுதும் போது பொற்கால ஆட்சி என்றும், புதிய வெளிச்சம் என்றும் புளகாங்கிதம் அடைகிறது இந்தப் பாடப்புத்தகம்.
ஆர்எஸ்எஸ் அமைப்பு இஸ்லாமிய மக்க ளுக்கு எதிராக தொடர்ந்து வெறுப்பரசியலை வளர்த்து வருகிறது. அதற்காக வரலாற்றை திரித்துக் கூறி வருகிறது. ஒவ்வொரு மன்னரு டைய ஆட்சிக் காலத்திலும், நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு. மத நல்லிணக்கத்தையும், மக்கள் ஒற்றுமையையும் உயர்த்திப் பிடித்த ஹைதர் அலி, திப்பு சுல்தான் போன்ற மன்னர்க ளும் உண்டு. தீண்டாமையை நியாயப்படுத்திய, சாதியக் கட்டுமானத்தை பலப்படுத்திய, தேவ தாசி முறையை சட்டப்பூர்வமாக்கிய மன்னர்க ளும் உண்டு. பொதுவாக மன்னராட்சி என்பது மக்க ளுக்கு எதிரானதாகவே இருந்து வந்துள்ளது
ஆனால் இந்து மன்னர்களை மட்டும் போற்றிப் புகழ்வதும், மற்ற மத மன்னர்களை கொ டுங்கோலர்களாக சித்தரிப்பதும் வரலாற்றுக்கு புறம்பானதாகும். ஆனால் ஒன்றிய அரசு புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் இதைத்தான் தொடர்ந்து செய்து வருகிறது.
மாநில பாடத்திட்டங்களை அழித்து, ஒன்றிய கல்வித் திட்டத்தை இவர்கள் புகுத்த நினைப்பது தங்கள் வரலாற்றுச் சரடை நியாயப்படுத்துவதற் காகவே ஆகும். மத நல்லிணக்கத்தையும், வரலாற் றையும் ஒரு சேர சீரழிக்க நினைக்கும் ஒன்றிய பாடத்திட்டம் ஆபத்தானது. இதையும் உள்ள டக்கிய புதிய கல்விக் கொள்கை முறியடிக்கப்பட வேண்டும்.