headlines

img

வேலையில்லா திண்டாட்டம்: மோடி அரசின் தோல்வி

வேலையில்லா திண்டாட்டம்:  மோடி அரசின் தோல்வி

2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜக தனது தேர்தல் வாக்குறுதியில் ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை வழங் கப்படும் என கூறியது. அதனை நம்பி வாக்களித்த இளைஞர்களுக்கு அது பட்டை நாமத்தையே சாத்தியது. இது அம்பலமான நிலையில் 2024 இல் தேர்தல் வாக்குறுதியில் “லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள்” என  நழுவிக் கொண்டது. 

முன்னதாக மோடி அரசின் ‘மேக் இன் இந்தியா’ திட்டம், 2021-க்குள் 10 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கும் என்று உறுதியளித்தது. ஆனால் அது முழுமையாக தோல்வியடைந்துள்ளது. ‘ஸ்கில் இந்தியா’ திட்டத்தின் கீழ் 40 கோடிப் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அதன் மூலம் வேலை உறுதி செய்யப்படும் என அறிவித்தது. ஆனால்  அந்த திட்டமும் புதிய வேலைவாய்ப்புக ளை உருவாக்க வில்லை. புதிதாக ஆண்டுக்கு ஒரு கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலைச் சந்தையில் நுழைகின்றனர். ஆனால் அவர்களு க்கு போதுமான வேலை வாய்ப்புகள் இல்லை.

2015-16 ஆம் ஆண்டு ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழிலாளர் பணியகம் வேலை யின்மை குறித்த அறிக்கையை வெளியிட்டது. அப்போது அதற்கு முந்தைய 5 ஆண்டுகளை விட வேலையின்மை விகிதம் 5 சதவிகிதம் அதிக ரித்திருந்தது. அதோடு தொழிலாளர் பணியகம் வேலையின்மை குறித்து நடத்தும் ஆய்வையே மோடி அரசு நிறுத்தி விட்டது.

அதன்பின்னர் 2017-18 ஆம் ஆண்டில்  என். எஸ்.எஸ்.ஒ (தேசிய மாதிரி ஆய்வு) வெளியிட்ட ஆய்வறிக்கையில் அதற்கு முன்பு 45 ஆண்டு காலம் இல்லாத அளவில் வேலையின்மை விகிதம் 6.1 சதவிகிதமாக உயர்ந்தது. அதனைத் தொடர்ந்த தேசிய மாதிரி சர்வேயையே மோடி அரசு நிறுத்திவிட்டது. அதன் பின்னர் ஒன்றிய அரசு விரும்பும் வகையில் புள்ளிவிபரங்களை மாற்றியமைக்க புதிய வகையிலான புள்ளிவிபர கணக்கெடுப்பை மேற்கொண்டது. அதாவது ஒன்றிய புள்ளியியல் துறை மாதாந்திர குறிப்பிட்ட கால தொழிலாளர் கணக்கெடுப்பை (பிஎல்எப் எஸ்) நடத்தும் என அறிவித்தது. அந்த கணக்கெ டுப்பிலும் உண்மையை முழுமையாக மூடி மறைக்க முடியவில்லை. 

பிஎல்எப்எஸ் - இன் சமீபத்திய புள்ளிவிவ ரப்படி ஏப்ரல் 2025-இல் வேலையில்லா திண்டாட் டம் 5.1 சதவிகிதமாக இருந்தது. ஆனால் மே மாதத் தில் இது 5.6 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் பிப்ர வரியில் வேலையின்மை விகிதம் 7.9 சதவிகிதம் என்றது. எப்படி முயன்றாலும் மோடி அரசின் தோல் வியை மூடிமறைக்க முடியவில்லை. அது பொரு ளாதாரத்திலும் தொடர்ந்து எதிரொலிக்கிறது. 

வேலையில்லா திண்டாட்டம் என்பது வெறும் புள்ளிவிவரம் அல்ல, அது மனித அவலம். மக்க ளின் நம்பிக்கை இழந்த அரசுகள் அதிகார மயக் கத்தில் தத்தளிக்கும் போது, பொருளாதார அதிருப்தி சமூக கலவரங்களுக்கு வித்திடும். அது ஜனநாயகத்தின் உயிர்நாடியையே பாதிக்கும்.