சீன ஜனாதிபதி ஜின்பிங் உடன் எஸ். ஜெய்சங்கர் சந்திப்பு!
இருதரப்பு உறவு குறித்து பேச்சு
பெய்ஜிங், ஜூலை 15- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) வெளியு றவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டையொட்டி, சீனா சென்றுள்ள இந்திய வெளி யுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்தித்தார். அப்போது, இருதரப்பு உறவு களின் சமீபத்திய மேம்பாடு குறித்து கலந்துரையாடினார். இரண்டு நாள் பயணமாக சீனத் தலைநகர் பெய்ஜிங் சென்ற எஸ். ஜெய்சங்கர், முதலில் அந்நாட்டின் துணை ஜனாதிபதி ஹான் ஜெங்கை சந்தித்துப் பேசினார். அப்போது, இந்தியா – சீனாவுக்கு இடையேயான உறவு தொடர்ந்து இயல்பு நிலையில் இருக்க அவர் அழைப்பு விடுத்தார். இந்நிலையில், செவ்வாயன்று (ஜூலை 15) காலை சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை ஜெய்சங்கர் சந்தித்துப் பேசியுள்ளார். தனது சந்திப்பு குறித்து அவர் தமது ‘எக்ஸ்’ பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். அதில், “இன்று காலை பெய்ஜிங்கில் ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை எஸ்சிஓ அமைப்பின் உறுப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் சந்தித்தேன். இருநாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் சமீபத்திய வளர்ச்சி குறித்து அவரிடம் விளக்கினேன்” என தெரிவித்துள்ளார்.