7 வயதை கடந்த குழந்தைகளுக்கு ஆதரை புதுப்பிப்பது அவசியம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது
பொதுவாக 5 வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகளுக்கு பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி மற்றும் புகைப்படம் ஆகியவற்றை வைத்து ஆதார் எண் வழங்கப்படுகிறது. 7 வயதைக் கடந்த பிறகு கைரேகை மற்றும் கருவிழிப் பதிவை இணைத்து ஆதாரை புதுப்பிக்க வேண்டும்.
அதன்படி பயோமெட்ரிக் விபரங்களைப் புதுப்பிக்கவில்லை எனில் ஆதார் செயல் இழக்கும் என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.