tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் தாமஸ் ஐசக்

கேரளம் எப்போதும் அந்நியர்களை வெறுக்கும்  மாநிலமாக இருந்ததில்லை. நம் மாநிலத்தின் வளர்ச்சிக்கு ‘விருந்தினர் தொழிலாளர்கள் (புலம்பெயர் தொழிலாளர்கள்)’ வழங்கும் பங்களிப்பை நாங்கள் மதிக்கிறோம். அவர்களுக்கு போதுமானதாக இல்லாவிட்டாலும், ஒப்பீட்டளவில் நாட்டின் சிறந்த நலத்திட்டங்களை கேரளம் கொண்டுள்ளது.

ஏபிஹெச்எல்சி தலைவர் ஜோன்ஸ் இங்டி காதர்

அசாம் மாநிலத்தில் பாஜக ஆட்சி அதிகாரத்தில் இருக்க மட்டுமே ஆசைப்படுகிறது. மக்களின் நலனுக்காக அல்ல. மலை மாவட்ட மக்கள் பாஜகவால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுள்ளனர். பாஜகவை வேரோடு அழிப்பதே எங்களின் முதல் நோக்கம்.

அசாம் தேசிய பரிஷத் தலைவர் லூரின்ஜோதி கோகோய்

சட்டமன்றத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிப்பதற்கான பயணத்தை நாங்கள் தொடங்கிவிட்டோம் என்ற வலுவான செய்தியைச் சொல்லவே, 4 கட்சிகள் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இணைந்துள்ளோம். அசாம் மண்ணிலிருந்து பாஜகவை அகற்றுவதே எங்கள் இலக்கு.

சிவசேனா (உத்தவ்) மூத்த தலைவர் சஞ்சய் ராவத்

இந்தியாவில் நிலவும் எல்பிஜி நெருக்கடியின் தாக்கம் குறித்து ஒன்றிய அரசுக்குத் தெரியவில்லை. காரணம் நாட்டு மக்களுடன் அவர்கள் இல்லை. எல்பிஜி நெருக்கடியின் காரணமாக பல்வேறு துறைகள் பலவிதமான சிக்கல்களைச் சந்தித்து வருகின்றன. ஆனால் பாதிப்பைக் குறைக்க ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.