world

img

தீக்கதிர் உலக செய்திகள்

புர்கினா பாசோவில்  ஐந்தாண்டுத் திட்டம் தொடங்கியது

வாகடூகு, மார்ச் 17- புர்கினா பாசோ தனது 2026-2030 ஆம் ஆண்டிற்கான 64 பில்லியன் டாலர்  (5,44,000 கோடி) மதிப்பிலான தேசிய வளர்ச்சித் திட்டத்தை (NDP)  மார்ச் 9 அன்று அறிமுகப்படுத்தியுள்ளது.  சாஹேல் (Sahel) நாடுகளில் முன்மொ ழியப்பட்ட மிகப்பெரிய பொருளாதாரத் திட்டங்களில் இது முக்கியத் திட்டமாகக் கருதப்படுகிறது.  இந்த நிதியில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் வருவாய் மற்றும் குடிமக்கள், பங்குதாரர் திட்டங்கள் மூலம் உள்நாட்டிலேயே திரட்டப்பட உள்ளது. “புர்கினா பாசோவின்  சொந்த வளங்க ளைப் பயன்படுத்துவதன் மூலம், நாட்டின் பொருளாதாரத்தை நிலையான முறையில் மாற்றியமைக்க முடியும் மற்றும் நமது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த முடியும்” என்று அந்நாட்டின் நிதி அமைச்சர் அபுபக்கர் நாகநாபோ (Aboubakar Nacanabo) குறிப்பிட்டுள்ளார். இப்ராஹிம் தரோர் தலைமையிலான ராணுவ ஆட்சி அமைவதற்கு முன்பு இருந்த அர சானது  வெளிநாட்டு நிதிகளை மட்டுமே சார்ந்திருந்தது. இதனை மாற்றி உள் நாட்டு வளங்களை பயன்படுத்தி நாட்டை மேம்படுத்த வேண்டும் என்ற அடிப்ப டையில் இத்திட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஐந்தாண்டு திட்டத்தில் வறு மையின் அளவை  42 சதவிகிதத்தில் இருந்து 35 சதவிகிதமாக  குறைப்பது, 61 ஆண்டுகளாக மட்டுமே உள்ள புர்கினா பாசோ குடிமக்களின்  சராசரி ஆயுட்காலத்தை  68 ஆண்டுகளாக உயர்த்துவது, உள்நாட்டு  மின் உற்பத்தி திறனை 685 மெகாவாட்டிலிருந்து (MW) 2,500 மெகாவாட்டிற்கும் மேலாக அதிகரிப்பது,  மிக முக்கியமாக  நாட்டின் முழுப் பகுதியையும் மீண்டும் அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது ஆகிய நான்கு அம்சங்கள் இந்த ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய அம்சமாக உள்ளன.  இவரது ஆட்சியில் விவசாயம் மற்றும் தொழில்துறையில்  நாடு பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. 2025  ஜூன் மாதம் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் கட்டுப்பாட்டில் இருந்த  ஐந்து தங்கச் சுரங்க சொத்துக்களை இப்ராகிம் அரசு டமையாக்கினார். இதன் மூலம், புர்கினா பாசோவின் முக்கிய ஏற்றுமதிப் பொரு ளான தங்கத்தின் தொடர் விலை உயர்வால் அந்நாட்டு அரசு பெரும் லாபம் ஈட்டியது. இந்த வருவாயைக் கொண்டு இரண்டு பில்லியன் டாலருக்கும் அதிகமான கடனைத் திருப்பிச் செலுத்தியது. இதன் மூலம் அரசாங்கம் தனது உள்நாட்டுக் கடனை நான்கில் ஒரு பங்காகக் குறைத்து நாட்டின் நிதி நிலையை கணிசமாக மேம்படுத்தியது. இந்த வலுவான அடித்தளத்தில் புர்கினா பாசோ இப்போது 64 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐந்தாண்டுத் திட்டத்து டன் ஒரு லட்சியப் பாய்ச்சலை மேற்கொண் டுள்ளது.

ஆப்கன் தலைநகரில் பாகிஸ்தான் குண்டு வீச்சு : 400 பேர் பலி

காபூல், மார்ச் 17- ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள போதைப்பொருள் மறு வாழ்வு மையத்தின் மீது பாகிஸ்தான்  குண்டு வீசியது. இத்தாக்குதலில்  400 பேர் பலியாகியுள்ளதாக ஆப்கா னிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. திங்கள்கிழமை நள்ளிரவு நடத்தப் பட்ட இந்தத் தாக்குதலில் மருத்துவ மனையின் பெரும் பகுதி அழிந்துவிட்ட தாகவும், இதுவரை 400 பேர் உயிரி ழந்துள்ளதாகவும், 250-க்கும் மேற் பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஆப்கன் துணை செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா பித்ரத் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் பெரும்பாலா னோர் அந்த மையத்தில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள். மீட்புக் குழு வினர் இடிபாடுகளில் இருந்து உடல் களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் இந்தத் குற்றச்சாட்டு களை முற்றிலுமாக நிராகரித்துள்ளது. காபூல் மற்றும் நங்கர்ஹார் பகுதிக ளில் உள்ள தலிபான் மற்றும் பயங்கர வாதிகளின்  உள்கட்டமைப்புகள், ஆயுதக் கிடங்குகள் ஆகியவற்றை மட்டுமே குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் தகவல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே கடந்த  மூன்று வாரங்களாக மோதல் நீடித்து வருகிறது. எல்லைப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்கெனவே நான்கு பேர் கொல்லப்பட்டனர். பல்வேறு பயங்கரவாதக் குழுக்களுக்கு ஆப்கா னிஸ்தான் புகலிடம் அளிப்பதாக பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.   இத்தாக்குதலுக்கு இந்தியா உட்பட பல நாடுகள் கடும் கண்டனம் தெரி வித்து வருகின்றன.

நேதன்யாகு அலுவலகம் அருகே ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

 இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரான் பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது.இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அலுவலகத்திற்கு அருகே ஈரானின் ஏவுகணை ஒன்று தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் லாரிஜானியை கொலை செய்து விட்டோம் என இஸ்ரேல் அறிவித்துள்ளது. அதேபோல் புரட்சிகர காவல் படையின்  தன்னார்வலர்கள் பசிஜ் படைப்பிரிவு தளபதி கோலாம்ரெஸா சுலைமானியும் இஸ்ரேலின் தாக்குதலில் கொலையாகி விட்டார் என தெரிவித்துள்ளது. எனினும் இஸ்ரேலின் அறிவிப்புக்கு ஈரான் உடனடியாக பதிலளிக்கவில்லை.

பிராந்தியப் போர் உருவாகும் எனத் தெரிந்தே போரை துவங்கிய டிரம்ப்

 ஈரானைத் தாக்கினால் அது பிராந்தியப் போராக மாறும் என எச்சரிக்கப்பட்டும் டிரம்ப் போரைத் துவங்கியது தெரிய வந்துள்ளது. ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தி வருவது தனக்கு ஆச்சரியமாக இருப்பதாக டிரம்ப் தெரிவித்த நிலையில், ஈரானை தாக்குவது அமெரிக்காவின் வளைகுடா நட்பு நாடுகளுக்கு எதிரான பதிலடித் தாக்குதல்களைத் தூண்டிவிடும் என அவருக்கு முன்னரே எச்சரிக்கை விடுத்தோம் என  அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் நட்பு நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை ஈரான் தாக்கி வரும் நிலையில்  இத்தாக்குதல்கள் ஆச்சரியமளிக்கிறது என டிரம்ப் இருமுறை தெரிவித்தார்.