அவிநாசியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனைக் கூட்டம்
அவிநாசி, மார்ச் 17- சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அவிநாசியில் நடைபெற்ற ஆலோ சனைக்கூட்டத்தில் பாரபட்சம் இன்றி தேர்தல் ஆணையம் நியாயமான முறை யில் செயல்பட வேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியு றுத்தினர். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அவிநாசி வட் டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சி யர் விஜயராஜ் தலைமையில் அங்கீக ரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொது இடங்களில் சின்னம் வரைவது, கொடிக்கம்பங்கள் வைப்பது உள்ளிட்டவைகளுக்கு பெற வேண்டிய அனுமதி குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி அவி நாசி ஒன்றியச் செயலாளர் ஈஸ்வர மூர்த்தி, மாவட்டக் குழு உறுப்பினர் பழ னிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசுகையில், தேர்தல் ஆணையம் பார பட்சம் இன்றி நியாயமான முறையில் செயல்பட வேண்டும் என தெரிவித்த னர். இதை தொடர்ந்து திமுகவை சேர்ந்த பத்மநாபன் பேசுகையில், வேட்பாளர் பிரச்சாரம், வாகனப் பிரச்சாரம் உள்ளிட் டவைகளுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பு ஆன்லைன் செயலியில் அனுமதி பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. எனவே அவசரகால அனுமதிக்கு நேரி லும் அனுமதி வழங்க வேண்டும். அதே போல் வாகனங்களில் இயக்க கொடி கள் கட்டுவதை வேட்பாளர் செலவு கணக்கில் வைக்கக்கூடாது என தெரி வித்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யின் மாவட்டச் செயலாளர் சத்திய மூர்த்தி பேசுகையில், கட்சியின் மாவட் டச் செயலாளர்கள் கார்களில் அரசியல் கட்சி கொடிகள் கட்டுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். மூத்த குடிமக்கள் வாக்கு செலுத்தும் வகையில் அவர்க ளின் வீடுகளுகளுக்கு சென்று முன்கூட் டியே விளக்கம் அளிக்க வேண்டும். மேலும், வாக்கு செலுத்துவதற்கான உதவியாக வாகன ஏற்பாடுகள் செய்ய வேண்டும். வெயிலின் தாக்கம் அதிக மாக இருப்பதால், வரிசையில் நிற்கும் இடங்களில் பந்தல்கள் அமைக்க வேண்டும் என தெரிவித்தார். இக்கூட் டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றி யச் செயலாளர் முத்துசாமி உள்ளிட்ட பல கட்சியினர் கலந்து கொண்டனர்.
