tamilnadu

img

பெந்தேகோஸ்தே தேவாலயங்களின் கூட்டமைப்பு கேரள இடது ஜனநாயக முன்னணிக்கு ஆதரவு

பெந்தேகோஸ்தே தேவாலயங்களின் கூட்டமைப்பு கேரள இடது ஜனநாயக முன்னணிக்கு ஆதரவு

திருவனந்தபுரம் கேரளத்தின் யுனைடெட் பெந்தேகோஸ்தே கவுன்சில் என்னும் கிறிஸ்தவ பெந்தேகோஸ்தே தேவாலயங்களின் கூட்டமைப்பு சட்டமன்றத் தேர்தலில் இடது ஜன நாயக  முன்னணிக்கு (எல்டிஎப்) ஆதரவை அறிவித்துள்ளது. எல்டிஎப் அரசாங்கம் பெந்தே கோஸ்தே சமூகத்துடன் நின்று பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு களைக் கண்டறிந்ததாகவும், அதற்கு ஈடாக தேர்தல்களில் எல்டி எப்க்கு உதவும் என்றும் பெந்தே கோஸ்தே  சபைத் தலைவர்கள் தெரிவித்தனர். கடந்த அமைச்சர வைக் கூட்டத்தில் பெந்தே கோஸ்தே சமூகத்தை ஒரு தேவா லயமாக (சபை) அங்கீகரிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக நன்றி தெரிவிக்க வந்த சபை தலைவர்கள்  முதலமைச்சர் பினராயி விஜ யனைச் சந்தித்து தங்கள் ஆத ரவை அறிவித்தனர். பெந்தேகோஸ்தே தேவால யங்களில் பல்வேறு அரசியல் கட்சிகளில் பணியாற்றுபவர்கள் உள்ளனர். இருப்பினும், சமூ கத்திற்கு உதவியவர்களுடன் தேர்தல்களில் நிற்பதாக தேசியக் குழு அறிவித்துள்ளது. பல்வேறு தேவைகளை நிறைவேற்றிய எல்டிஎப் அரசாங்கத்திற்கு கடன் பட்டவர்களாகவும் நன்றியுள்ள வர்களாகவும் உள்ளதாக தெரி வித்தனர். கேரளத்தில் எல்டிஎப் அர சாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பிற பிரச்சனைகளும் பரி சீலிக்கப்படும் என்பதில் யுனைடெட் பெந்தேகோஸ்தே கவுன்சில் நம்பிக்கை தெரிவித்துள்ளது. கேரளத்தின் 45 சட்டமன்றத் தொகுதிகளில் பெந்தேகோஸ்தே கிறிஸ்தவ சமூகம் தீர்க்கமான செல்வாக்கைக் கொண்டுள்ளது என்றும் தலைவர்கள் ஊட கங்களிடம் தெரிவித்தனர்.