கேரளத்தில் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு
140 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட கேரளத்தில் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்த லை முன்னிட்டு அம்மாநிலத்தில் உள்ள ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட பல அதிகாரிகளை இடமாற்றம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் செவ்வாயன்று உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக கேரள மாநில தலை மைச் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,”தேர்தல் ஆயத்தப் பணி களை ஆய்வு செய்த பிறகு, இந்த இட மாற்றங்களை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் தேர்தல் முடியும் வரை தேர்தல் பணிகளில் மீண்டும் நியமிக் கப்படக் கூடாது” என தேர்தல் ஆணை யம் அறிவுறுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் 19 உயரதிகாரிகள் மேற்கு வங்கித்தில் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் பணி யிட மாற்றத்தை தொடர்ந்து, மேலும் 19 மூத்த காவல்துறை அதிகாரிகளை இட மாற்றம் செய்ய இந்திய தேர்தல் ஆணை யம் உத்தரவிட்டுள்ளது. தெற்கு வங்கம், வடக்கு வங்கம், அசன்சோல், ஹவுரா, பாரக்பூர், சந்தன்நகர் என 12 மாவட்டங்க ளின் காவல் உயரதிகாரிகள், காவல் கண் காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.
பாஜகவிற்கு வாக்களித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடைநீக்கம்
ஒடிசாவில் மாநிலங்களவைக்கு 4 வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டிய நிலை இருந்தது. வாக்கு எண்ணிக்கைகளின் அடிப்படை யில் பாஜக, எதிர்க்கட்சியான பிஜு ஜனதா தளம் தலா 2 இடங்களில் வெற்றி பெற வேண்டிய சூழல் இருந்தன. ஆனால் பாஜக 3ஆவது வேட்பாள ராக (சுயேச்சை) திலீப் ராயை கள மிறக்கியது. இதனால் தேர்தல் நடை பெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி பிஜு ஜனதா தளத்திற்கு ஆதரவு அளிப்ப தாக அறிவித்தது. ஆனால் முகமது முகீம், சந்தோஷ் சிங் சலுஜா, தாரா பிர சாத் பஹினிபதி ஆகிய 3 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜக ஆதரவு வேட்பா ளருக்கு வாக்களிக்க பிஜு ஜனதாதளம் ஒரே இடத்தில் (சந்துருப்த் மிஸ்ரா - பிஜு ஜனதாதளம்) மட்டுமே வென்றது. இந்நிலையில், கட்சியின் கொறடா உத்தரவை மீறியதற்காகவும், கட்சிக்கு விரோதமான நடவடிக்கையில் ஈடு பட்டதற்காகவும் 3 எம்எல்ஏக்களையும் காங்கிரஸ் கட்சி உடனடியாக இடை நீக்கம் செய்துள்ளது.
