17.7% அளவில் சரிந்த எல்பிஜி நுகர்வு
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் கள் மற்றும் ஈரானின் பதிலடி நடவடிக்கைகளால், ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளது. இந்தியா தனது எல்பிஜி தேவையில் சுமார் 60%-ஐ ஹோர் முஸ் வழியாக தான் இறக்குமதி செய்கி றது. இதனால் இந்தி யாவின் எரிவாயு விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்ட விநியோ கத் தடைகள் காரணமாக, மார்ச் மாதத் தின் முதல் பாதியில் இந்தியாவில் சமை யல் எரிவாயு (எல்பிஜி) நுகர்வு 17.7% அள வுக்குக் குறைந்துள்ளதாகத் தொழில் துறை தரவுகள் தெரிவிக்கின்றன. அதே போல, வளைகுடா நாடுகளில் வான் வெளி மூடப்பட்டதாலும், விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாலும், விமான எரி பொருள் நுகர்வு கடந்த ஆண்டோடு ஒப்பி டும்போது 4% சரிந்து 3,27,900 டன்களாக உள்ளது என்றும் செய்திகள் வெளியாகி யுள்ளன. மற்ற எரிபொருட்கள் சரிவைச் சந்தித்தாலும், பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை அதிகரித்துள்ளது. பெட்ரோல் 13.2% உயர்ந்து 1.5 மில்லியன் டன்க ளாக உள்ளது. டீசல் 8.2% உயர்ந்து 3.384 மில்லியன் டன்களாக உள்ளது.
