8 எம்.பி.க்கள் இடைநீக்கம் ரத்து! மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றம்
புதுதில்லி இந்தியா கூட்டணியின் 8 எம்.பி.க்கள் மீதான இடைநீக்கம் ரத்து செய்யப் பட்டது. இதற்கான தீர்மானம் மக்களவை யில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதியில், கடந்த பிப்ரவரி 3 அன்று, குடிய ரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது, ராகுல் காந்தி உரையாற்றும்போது, முப்படைகளின் தலைமைத் தளபதி எம்.எம். நரவணே எழுதிய புத்தகத்தில் சில வரிக ளைக் குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கும் கேள்வி எழுப்பினார். நாட்டின் பாது காப்பை ஒன்றிய பாஜக அரசு விட்டுக் கொடுத்த தாக தலைமைத் தளபதி எம்.எம். நரவணே கூறி யிருப்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றார். ஆனால், இது விவாதத்துக்கு தொடர் பில்லாத விவகாரம் என்று கூறி, ராகுல் காந்தி தொடர்ந்து பேசுவதற்கு அனுமதி மறுத்த மோடி அரசு, இந்த அராஜகத்தைக் கண்டித்துப் போராடிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூா், குா்ஜீத் சிங் அஜ்லா, ஹிபி ஈடன், சி.கிரண் குமாா் ரெட்டி, அமரீந்தா் சிங் வாரிங், பிரசாந்த் படோல், டீன் குரியகோஸ் உள்ளிட்டோரை கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்தது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இடைநீக்கம் செய்யப்பட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள், நாடாளுமன்ற வளாகத்தில் தொடர் போராட்டங்களை நடத்தி வந்த நிலை யில், அவைத் தலைவர் ஓம் பிர்லா தலைமை யில் திங்கள்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, இடைநீக்கத்தை ரத்து செய்ய ஓம் பிர்லா ஒப்புக் கொண்டார். இந்நிலையில், 8 எம்.பி.க்களின் இடை நீக்கத்தை ரத்து செய்யும் தீர்மானத்தை சபாநாய கர் ஓம் பிர்லா செவ்வாயன்று மக்களவை யில் முன்மொழிந்தார். தொடர்ந்து குரல் வாக்கெ டுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
