tamilnadu

img

ரூ. 408 கோடி செலவில் கட்டப்பட்ட திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம்

ரூ. 408 கோடி செலவில் கட்டப்பட்ட  திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

திருச்சிராப்பள்ளி, மே 9 - திருச்சி பஞ்சப்பூரில் நவீன வசதி களுடன் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக் கிழமை (மே 9) திறந்து வைத்தார்.  மேலும், பல்வேறு நலத்திட்டங்களை யும் தொடங்கி வைத்தார். இரண்டு நாள் கள ஆய்விற்காக திருச்சி சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலின், டி.வி.எஸ் டோல்கேட் அருகே உள்ள சுற்றுலா மாளிகை யில் இருந்து பஞ்சப்பூர் வரை சாலை மார்க்கமாக வருகை தந்தார். வழி நெடுகிலும் அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பஞ்சப்பூரில் தந்தை பெரியார், அண்ணா சிலைகளை திறந்து வைத்த ஸ்டாலின், பேரறிஞர் அண்ணா கனரக சரக்கு வாகன முனையத்தையும் திறந்து வைத்தார். தொடர்ந்து, ரூ. 408.36 கோடி மதிப்பில் கட்டப் பட்டுள்ள கலைஞர் கருணாநிதி ஒருங்கி ணைந்த பேருந்து முனையத்தை திறந்து வைத்தார். பேருந்து நிலை யத்தை சுற்றிப் பார்த்து, பொது மக்களுக்காக செய்யப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட்டார். பேருந்து நிலையத்தின் முதல் தளத்தில் நகர பேருந்துகளின் இயக்கத்தை தொடங்கி வைத்தார். இரண்டு தளங்களை கொண்ட இந்த  பேருந்து நிலையத்தில், தரை தளத்தில் வெளியூர் பேருந்துகளும், முதல் தளத்தில் நகர பேருந்துகளும் இயக்கப்படும். தரை தளம் முழு வதும் ஏ.சி வசதி கொண்டது. ஒரே  நேரத்தில் 401 பேருந்துகள் நிறுத்தும் வசதி, டிஜிட்டல் வழிகாட்டி பலகை கள், உணவகங்கள், கடைகள், ஆண்கள், பெண்கள், திருநங்கை களுக்கு என 173 கழிப்பறைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் உள்ளன. அண்டர் கிரவுண்டில் 1544 இருசக்கர வாகனங்கள், தரை  தளத்தில் 216 கார்கள், 391 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதியும் உள்ளன. ரூ.1,543 கோடியில் பணிகள்... இதைத்தொடர்ந்து, பஞ்சப்பூர் பேருந்து முனைய வளாகத்தில் அரசு விழா நடைபெற்றது. விழாவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வரவேற்றார். அரசு முதன்மை செயலாளர் கார்த்திகேயன் திட்ட விளக்க உரை ஆற்றினார். அமைச்சர் கே.என். நேரு தலைமை தாங்கினார்.  விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆகியோர் முன்னி லை வகித்தனர். அதில், 50 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். மேலும், ரூ.463.30 கோடி மதிப்பில் நிறைவுற்ற பணிகளை திறந்து வைத்தும், ரூ.276.95 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி யும், ரூ.830.35 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் வழங்கினார். விமான நிலையத்துக்கு இணையாக... இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், “இது பஞ்சப்பூர் அல்ல, எல்லா ஊரையும் மிஞ்சப்போகிற மிஞ்சப்பூர் என்றே தோன்றுகிறது. திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய பேருந்து நிலையத்தை அமைச்சர் கே.என். நேரு, பார்த்துப் பார்த்து தனது மாவட்டத்துக்கு என ஸ்பெஷலாக உருவாக்கியுள்ளார். விமான நிலையத்துக்கு இணையான வசதிகளுடன் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மின் தூக்கி, நகரும் படிக்கட்டு, ஏசி வசதி ஆகி யவை உள்ளன. தமிழகத்தின் இதயம் போன்ற திருச்சிக்கு இப்படி ஒரு பேருந்து முனையம் அவசியம். மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் போல திருச்சியில் காமராஜர் நூலகம் கட்டப்பட்டு வருகிறது. இடைநிற்றல் கூடாது என மாணவர்களை தேடிப்போய் மீண்டும் பள்ளிக்கு அனுப்புகிறோம்” என்றார்.