முதல்வர் தலைமையில் இன்று தேச ஒற்றுமை பேரணி!
சென்னை, மே 9 - இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் ஏற்பட்டிருக்கும் சூழ லில், நமது ராணுவத்துக்கு ஆதரவாக சனிக்கிழமை யன்று (மே 10), பேரணி நடத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் ஓர் அறிவிப்பை வெளியிட்டு ள்ளார். அதில், “பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கும், தீவிரவாதத் தாக்குதல் களுக்கும் எதிராக வீரத்து டன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்திற்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமை யையும் ஆதரவையும் வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது. அதனை வெளிப்படுத்தும் வகையில் ஒரு பேரணி, சனிக்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை யில் உள்ள காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் எனது தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் முன்னாள் படை வீரர்கள், அமைச்சர்கள், பொதுமக்கள் மற்றும் மாண வர்கள் என அனைத்து தரப் பினரும் கலந்துகொள்வார் கள். இந்த பேரணி தீவுத்திடல் அருகே உள்ள போர் நினைவுச் சின்னம் அருகில் நிறைவு பெறும். இந்த பேரணியானது, இந்திய ராணுவத்தின் வீரத்தையும் தியாகத்தை யும் அர்ப்பணிப்பையும் போற்றுவதற்கும், தேச ஒற்றுமையை வெளிப் படுத்துவதற்கும் நடத்தப்படு கிறது. தமிழ்நாட்டு மக்கள் இந்த பேரணியில் பங்கேற்று நமது ராணுவத்திற்கு ஆத ரவு தெரிவிக்குமாறு அன்பு டன் கேட்டுக்கொள்கிறேன்” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.