tamilnadu

img

செங்கம் பார்த்தசாரதி பெருமாள் கோயிலுக்கு 5 மசூதியிலிருந்து 51 தட்டுகளில் சீர்வரிசை!

செங்கம் பார்த்தசாரதி பெருமாள் கோயிலுக்கு  5 மசூதியிலிருந்து 51 தட்டுகளில் சீர்வரிசை!

இஸ்லாமியர்களுக்கு கோயில் நிர்வாகிகள் மரியாதை

திருவண்ணாமலை, மே 9 - திருவண்ணாமலை மாவட்டம், செங்கத் திலுள்ள வேணுகோபால பார்த்தசாரதி பெரு மாள் கோயில் கும்பாபிஷேகத்திற்கு, இஸ்லாமிய பெருமக்கள், 5 மசூதிகளி லிருந்து மேளதாளங்கள் முழங்க 51 தட்டுக்களில்  சீர்வரிசை எடுத்து வந்தனர். செங்கம், துக்காப்பேட்டை, மில்லத்  நகர், தளவாய் நாயக்கன் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மசூதிகளிலிருந்து எடுத்து வரப்பட்ட சீர்வரிசையை, திமுகவைச் சேர்ந்த செங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் மு.பெ. கிரி, அறங்காவலர் குழுத் தலை வர் அன்பழகன், திருப்பணிக்குழு தலைவர் வழக்கறிஞர் சுஜேந்திரன் ஆகியோர் வரவேற்றனர். மசூதி நிர்வாகிகளுக்கு   கோயில் சார்பில் மரியாதை மசூதிகளிலிருந்து இஸ்லாமியர்கள் கொண்டு வந்த சீர்வரிசைத் தட்டுகள் பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர், சட்டமன்ற உறுப்பினர் மு.பெ. கிரி  மற்றும் அறங்காவலர் குழுத் தலைவர் அன்ப ழகன் ஆகியோர் தலைமையில் கோவில் நிர்வாகம் சார்பில் மசூதி நிர்வாகிகளுக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மத நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டிய நிகழ்வு இந்த நிகழ்வின் போது உரையாற்றிய மு.பெ. கிரி எம்எல்ஏ, “செங்கம் தொகுதியில் மிகவும் பழமையான பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு செங்கம் நகரில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் ஒன்று சேர்ந்து இந்த சீர்வரிசையை எடுத்து வந்தது எல்லையில்லா மகிழ்ச்சி அளிக்கிறது. இது மத நல்லிணக்கத்தைக் காட்டுகிறது. நாம் எப்போதும் இந்த ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்” என்றார். செங்கம் நகர்மன்றத் தலைவர் சாதிக் பாஷா, வியாபாரிகள் சங்க துணைத் தலைவர் தாவூத் கான், பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் அப்துல் சர்தார்,  திமுக இலக்கிய அணி துணை அமைப்பா ளர் அப்துல் வாகித் மசூதி நிர்வாகிகள் ஜான் முகமது, கலிமுல்லா, பட்டேல் நவீத் கான், உள்ளிட்ட ஏராளமான இஸ்லா மியர்கள் செங்கம் நகரப்பகுதியில் உள்ள அனைத்து மசூதி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு நீர் - மோர்  வழங்கிய வாலிபர் சங்கம்  சமய வழிபாடு மட்டுமல்லாது, கிராம நிர்வாகம், விவசாயம், அரசியல் பணிகளுக்  காக கடந்த 700 ஆண்டுகளுக்கு முன்னர் விஜ யநகர பேரரசின் கீழ் இருந்த ஆளுநர்களில் ஒருவரான தளவாய் நாயக்கன் என்பவரால் செங்கம் செய்யாற்றின் கரையில் பெரு மாள் கோயில் அமைக்கப்பட்டது.  பல நூறு ஆண்டுகளாக சாதி, மத வேறுபாடுகளை கடந்து மக்கள் இந்த கோயிலை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், அந்த பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா, செங்கம் ஊர்  திருவிழாவாக நடைபெற்றது. ஏராளமான மக்கள் இதில் கலந்து கொண்டனர்.  திருவிழாவில் கலந்து கொண்ட பொது மக்களுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நீர் - மோர் வழங்கப்பட்டது. வாலிபர் சங்கத்தின் மாவட்ட முன்னாள் செயலாளர் ஏ. லட்சுமணன், மாவட்டச் செய லாளர் சி.எம். பிரகாஷ், மாவட்டத் தலைவர் சி. முருகன், மூத்த தலைவர் கணபதி, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் கோபி நாத், நிர்வாகிகள் சுந்தரேசன், ரஞ்சித், இளம்பரிதி, கோபால் தொழிற்சங்க தலை வர்கள் டைலர் ரவி, எம். சரவணன், ஆர். ரவி, பிரண்ட்ஸ் ஏழுமலை, ஜானகிராமன், குமாரசாமி ஆகியோர் பங்கேற்றனர்.