Group 1 examination
டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட தவறான 24 கேள்விகளுக்கு 6 மதிப்பெண்கள் வழங்கி யுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி சார்பில் உயர்நீதி மன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வில், கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒப்புக் கொண்டுள்ளது.