சென்னை,ஜூன் 17- டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட தவறான 24 கேள்விகளுக்கு 6 மதிப்பெண்கள் வழங்கி யுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி சார்பில் உயர்நீதி மன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச்சில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு வினாத்தாளில் குளறுபடிகள் இருந்த தாகவும், தேர்வில் வெளிப்படை தன்மை இல்லை என்றும் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என கடந்த விசாரணையின்போது டிஎன்பிஎஸ்சி ஒப்புக் கொண்டது. இந்த வழக்கு திங்களன்று(ஜூன்17) மீண்டும் நீதிபதி பார்த்திபன் அமர்வில் விசார ணைக்கு வந்தது. அப்போது, டிஎன்பிஎஸ்சி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தேர்வு முடிந்த பிறகு, தேர்வாணையம் வெளியிட்ட மாதிரி விடைத்தாளில், 96 கேள்விகளுக்கு தவறான பதில்கள் இடம்பெற்ற தாக 4,390 புகார் மனுக்கள் வந்ததாக தெரிவிக்கப் பட்டுள்ளது. அதன் அடிப்படையில், 3 பேர் கொண்ட நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்ட தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 கேள்விகளுக்கு தவறான விடைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், 5 கேள்விகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சரியான விடைகள் வழங்கப்பட்டுள்ளதாக வும், 7 கேள்வி களில் வினாக்களே தவறானவை எனவும் நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையிலேயே, கூடுத லாக 6 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு தேர்வு முடிவு கள் வெளியிடப்பட்டது எனவும் அந்த பதில் மனு வில் தெரிவிக்கப்பட்டது. மேலும் நிபுணர் குழு அறிக்கையை தற்போது வெளியிட முடியாது என வும் டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது. இதையடுத்து டிஎன்பிஎஸ்சி.யின் பதில் மனு தொடர்பாக மனுதாரர் தங்களின் விளக்கத்தை மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை ஜூன் 19 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.