சாலை விபத்தில் ஐடி ஊழியர்கள் உயிரிழப்பு
சேலம், மே 17- திருவாகக்கண்டனூர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் ஐடி ஊழியர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், இரும்பாலை அருகே உள்ள தளவாய் பட்டியை சேர்ந்தவர் சாரதி (22). இதேபோன்று தாதகாப்பட்டி யைச் சேர்ந்தவர் சாருபிரியா (22). இவர்கள் 2 பேரும் சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணி புரிந்து வந்தனர். இந்நிலையில், சாரதி மற்றும் சாருபிரியா ஆகிய 2 பேரும், உடன் பணிபுரியும் நண்பர்கள் சிலருடன் ஏற்காடு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதன்படி, சனி யன்று அதிகாலை 3 மணியளவில் தாதகாப்பட்டி கேட்டில் இருந்து சாரதி, சாருபிரியா ஆகியோர் ஒரே இருசக்கர வாக னத்தில் புறப்பட்டனர். தொடர்ந்து, அவர்கள் திருவாக்கவுண் டனூர் மேம்பாலம் அருகே சென்ற போது, அங்கிருந்த சிறு பள்ளத்தில் தண்ணீர் தேங்கியிருந்ததால் சற்று ஒதுங்கி செல்ல முயன்று, வாகனத்தை திருப்பியுள்ளனர். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம டைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். இதில் தலை நசுங்கிய நிலையில் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வயிற்று பகுதியில் காயமடைந்த சாருபிரியா வும் சற்று நேரத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த சூரமங்கலம் காவல் துறை யினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சம்பவம் குறித்து விசாரித்தனர். இதன்பின் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவன் தூக்கிட்டு தற்கொலை '
சேலம், மே 17- கொங்கணாபுரம் அருகே புதுமையாக முடிவெட்ட பெற் றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்ப டுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், கொங்கணாபுரம் ஒன்றியம், கோரணம்பட்டி கிராமம், சாணாரப்பட்டி பகுதி யைச் சேர்ந்த கோபால் - கோகிலா தம்பதிக்கு யுவன் கதிர் (16), கீர்த்தி சர்மா (15) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இதில், கீர்த்தி சர்மா 10 ஆம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில், அவர், புதுமையாக முடி வெட்டிக் கொள்கிறேன்’ என தாயாரிடம் கேட்டுள்ளார். அதற்கு தாயார், ‘அப்பாவிடம் கேட்டு சொல்கிறேன்; கொஞ் சம் பொறு’ என்று சொல்லிவிட்டு ஆடு மேய்க்க சென்றுள் ளார். இதன்பின் வீட்டிற்கு வந்தபோது, கீர்த்தி சர்மா வீட்டில் இல்லை. இதனை உடனடியாக கணவரிடம் தெரிவித்துள் ளார். அங்கு வந்த கோபால் அக்கம்பக்கத்தில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. மே 15 ஆம் தேதியன்று காலை உறவின ரான ராஜா என்பவர் கோபாலுக்கு, போன் செய்து வீட்டின் அருகே உள்ள வேப்பமரத்தில் கீர்த்திசர்மா தூக்கில் தொங்கு வதாக கூறியுள்ளார். இதனையறிந்த பெற்றோர், அங்கு சென்று தன் மகன் தற்கொலை செய்து கொண்டதை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து தகவலறிந்த கொங்கணாபுரம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதிப்பெண் குறைவால் மாணவி தற்கொலை
தருமபுரி, மே 17- பாலக்கோடு அருகே 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றதால், மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள பேளாரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த வர் முருகேசன். இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இதில் இளைய மகள் காசிகா (15) அங்குள்ள அரசுப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு, தேர்வு முடி விற்காக காத்திருந்தார். இந்நிலையில், வெள் ளியன்று தேர்வு முடிவுகள் வெளியான நிலை யில், கணித பாடத்தில் தேர்ச்சி பெறாததால், 10 ஆம் வகுப்பில் தோல்வியடைந்தார். இத னால், விரக்தியடைந்த காசிகா, வீட்டின் அருகே உள்ள மாட்டு கொட்டகையில் தூக் கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின்பேரில், பாலக்கோடு போலீ சார் சம்பவ இடத்திற்கு சென்று, மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 4 பேர் தற்கொலை முயற்சி இதேபோன்று, பழைய தருமபுரியைச் சேர்ந்த சின்னப்பன் மகள் ஸ்ரீமதி, ரமேஷ் மகள் தர்சினி, சக்திவேல் மகள் சாய்மதி, விஜயகுமார் மகள் விஜயதர்சினி ஆகியோர் தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக வாங் கியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமு டைந்து காணப்பட்ட அவர்கள் தற்கொ லைக்கு முயற்சி செய்துள்ளனர். இதைய டுத்து அவர்களை பெற்றோர்கள் உடனடி யாக மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர் கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தனியார் பள்ளி வாகனங்களில் ஆட்சியர் ஆய்வு
கோவை, மே 17- தனியார் பள்ளி வாகனங் களில் கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற் கொண்டு பள்ளி வாகன ஓட் டுநர்களுக்கு அறிவுரை வழங்கினார். கோவை மாவட்டம், அவி நாசி சாலையில் உள்ள காவ லர் பயிற்சிப்பள்ளி மைதானத் தில், தனியார் பள்ளி பேருந்து கள் மொத்தமாக நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும் 58 வாகனங்கள் பல்வேறு கார ணங்களால் திருப்பி அனுப் பப்பட்டது. அதில் 945 வாக னங்களை சனியன்று கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் நேரில் ஆய்வு செய்து, ஓட்டுநர்களிடம் வாகனங்களை எவ்வாறு ஓட்ட வேண்டும் என்று அறி வுரை வழங்கினார். முதலு தவி பெட்டி, முன் மற்றும் பின் கேமரா, அவசர கதவு, பள்ளி குழந்தைகளின் பேக் ராக், தீயணைப்புக் கருவி போன் றவைவாகனத்தில் பொருத் தப்பட்டு உள்ளதா? என்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், ஓட்டுநர்களுக்கு கண் சிகிச்சை முகாம் நடை பெற்றது.
காந்தி ஆசிரம முன்னாள் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல், மே 17- பணிக்கொடை, நூற்போர் நல நிதி ஆகி யவற்றை உடனடியாக வழங்கக்கோரி காந்தி ஆசிரமத்தின் முன்னாள் ஊழியர்கள் சனி யன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் தொடங்கப்பட்டு 101 ஆண்டு கள் நிறைவடைந்து விட்டது. இதன் முன் னாள் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடை, விடுப்பு கால சம்பளம், ராட்டை நூற்போர் கூலி, நெய்வோர் கூலி, நூற்போர் நல நிதி ஆகியவை நீண்ட காலமாக வழங்கப்படாமல் உள்ளது. அவற்றை உட னடியாக வழங்க வலியுறுத்தி, முன்னாள் ஊழியர்கள் புதுப்பாளையத்தில் உள்ள காந்தி ஆசிரம தலைமை அலுவலகம் முன்பு சனியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் ஊழியர் முத்துசாமி தலைமை வகித்தார். முன்னாள் ஊழியர் பூபதி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். இதில் திரளானோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், முன்னாள் ஊழியர்கள், நூற்பவர்கள், நெய்ப வர்கள் ஆகியோருக்கு நீண்ட காலமாக வழங்காமல் உள்ள தொகையை உடனடி யாக வழங்க வேண்டும். ராட்டையின் மூலம் உற்பத்தி செய்யும் நூலை உற்பத்தி செய்யா மல் உற்பத்தி செய்ததாக போலியாக கணக்கு காட்டி ஊழல் செய்கிறார்கள். கதர் உற்பத்தி செய்யாமல் உற்பத்தி செய்ததாக கணக்கு காட்டி, ஈரோட்டிலுள்ள தனியார் பிரிண்டிங் கம்பெனி மூலம் போலி கதரை கொள்முதல் செய்து மிகப்பெரிய ஊழல் செய்து வருவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். காந்தி ஆசிரம கடை யில் கதர் துணிகளோடு, மில் போர்வை, மில் பெட்ஷீட், ஆகியவற்றை விற்பனை செய் வதை நிறுத்த வேண்டும். நெசவாளர்களுக்கு வழங்க வேண்டிய கூலி மட்டும் சுமார் ரூ.12 லட்சம் நிலுவையில் உள்ளது. எனவே, காந்தி ஆசிரம நிர்வாகம் பணிக்கொடை, விடுப்பு கால சம்பளம் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும், என்றனர்.