tamilnadu

img

சாலை ஓர பாதுகாப்பற்ற இடங்களை ஆய்வு செய்ய உத்தரவு!

சென்னை,மே.18- சாலை ஓரங்களாஇல் உள்ள பாதுகாப்பற்ற இடங்களை ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 
தமிழ்நாடு முழுவதும் சாலை ஓரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு இல்லாத இடங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.
நேற்று தூத்துக்குடி சாத்தான்குளத்தில் சாலையோரத்தில் இருந்த கிணற்றில் ஆம்னி வேன் விழுந்த விபத்தில், 5 பேர் உயிரிழந்ததை அடுத்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை.