tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

குமரி பகவதி அம்மன் கோயில் தெப்பக்குளம் சீரமைப்பு துவக்கம்

நாகர்கோவில். மே. 18- கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தெப்பக்குளம் ரூ.41 லட்சம் செலவில் சீரமைக்கப்படுகிறது. நீர்ப்பாசனம், பராமரிப்பு பற்றாக் குறை காரணமாக குளம் வறண்டது. ஜூன் 9 ஆம் தேதி தெப்பத் திருவிழா வை முன்னிட்டு சீரமைப்பு பணிகள் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தலைமையில் துவக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், துணைத் தலைவர் ஜெனஸ் மைக்கேல், கோவில் மேலாளர் ஆனந்த், பொறியாளர் ராஜ்குமார், அறங்காவலர் குழு உறுப்பினர் துளசிதரன் நாயர் , கவுன்சிலர்கள் ஆனிரோஸ் தாமஸ், இக்பால், முன்னாள் கவுன்சிலர் தாமஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.

மே 23 வரை மழை நீடிக்கும்

சென்னை, மே 18- அரபிக்கடல் பகுதிகளில்  மே 22 ஆம் தேதி காற்ற ழுத்த தாழ்வு பகுதி உரு வாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள் ளது. தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவு கிறது. அதேபோல் மே 22  அன்று அரபிக்கடல் பகுதி யில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். தென் கிழக்கு வங்கக்கடல் பகுதி களிலும் வளிமண்டல மேல டுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் ஒரு சில இடங் களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய  லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும்.  அதன் தொடர்ச்சியாக மே 23 ஆம் தேதி வரை தமிழ கத்தில் அநேக இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.