ஹைதராபாத்தில் துயரம் நகைக்கடை தீ விபத்தில் சிக்கி 17 பேர் பலி
ஹைதராபாத், மே 18- தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் சார்மி னார் பகுதியில் குல்சார் ஹவுஸ் அருகே ஸ்ரீ கிருஷ்ணா பியர்ல்ஸ் நகைக்கடை உள்ளது. இந்த நகைக்கடை 3 மாடிகளை கொண்டது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை நகைக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீய ணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மொகல்புரா, கெளலிகுடா நிலையங்களிலிருந்து 11 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். ஆனால் கட்டடத்தின் பெரும்பாலான பகுதியை தீ ஆக்கிரமித்ததால், மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டது. மேல்தளங்களில் தீ பரவியதால் தீயில் சிக்கியும், மூச்சுத்திணறல் ஏற்பட்டும் 2 குழந்தைகள், 2 பெண்கள் என 17 மேற்பட்டோர் பேர் பலியாகினர். 20-க்கும் மேற்பட்டோர் மீட் கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேரின் நிலைமை கவலைக் கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது