tamilnadu

img

வார விடுமுறை வழங்க போக்குவரத்து ஊழியர்கள் வலியுறுத்தல்

வார விடுமுறை வழங்க போக்குவரத்து ஊழியர்கள் வலியுறுத்தல்

தருமபுரி, மே 17- அனைத்து தொழிலாளர்களுக் கும் சட்டப்படியான வார விடுமுறை வழங்க வேண்டும், என சிஐடியு போக்குவரத்து ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சிஐடியு தமிழ்நாடு அரசு போக் குவரத்து கழக ஊழியர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட 27 ஆவது ஆண்டு  பேரவைக் கூட்டம், தருமபுரி வாணி யர் மஹாலில் சனியன்று நடைபெற் றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.முரளி தலைமை வகித்தார். உத வித்தலைவர் வி.மனோன்மணி சங் கத்தின் கொடியை ஏற்றி வைத்தார். சம்மேளன துணை பொதுச்செயலா ளர் டி.ஜான்சன் கென்னடி துவக்க வுரையாற்றினார். மாவட்ட பொதுச் செயலாளர் எஸ்.சண்முகம், பொரு ளாளர் பி.பசுவராஜ் ஆகியோர் அறிக் கைகளை முன்வைத்தனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.ஜீவா, கிருஷ்ணகிரி மாவட்டச் செயலா ளர் என்.ஶ்ரீதர், சம்மேளன இணைச் செயலாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சிஐ டியு மாநிலச் செயலாளர் சி.நாக ராசன் சிறப்புரையாற்றினார். சம் மேளன பொதுச்செயலாளர் கே. ஆறுமுக நயினார் நிறைவுரையாற் றினார். இக்கூட்டத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் அனைத்து பிரிவுகளிலும் உள்ள காலிப்பணியி டங்களை உடனடியாக நிரப்ப வேண் டும். 15 ஆவது ஊதிய ஒப்பந்தத்தை  உடனடியாக பேசி முடிக்க வேண் டும். 2003 ஆம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்ப டுத்த வேண்டும். ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு ஓய்வு பெற்ற நாளிலேயே பணப்பயன்களை வழங்க வேண்டும், உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து சங்கத்தின் மாவட்டத் தலைவராக எஸ்.சண் முகம், பொதுச்செயலாளராக சி. ரகுபதி, பொருளாளராக என்.மயில் சாமி, துணை பொதுச்செயலாளர் களாக கே.வெங்கடாசலபதி, எம்.முத்துலிங்கம், கே.பிரபாகரன் உள் ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். முடிவில், ஜே.முருகன் நன்றி கூறினார்.