districts

img

குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு

புதுக்கோட்டை, ஆக.3- புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடவாளம் ஊராட்சி கிழக்கு செட்டியாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த டீக் கடை நடத்தும் வீரமுத்து - வீரம்மாள் தம்பதி யரின் 3-ஆவது மகள் பவனியா. இவர் அரசு  பள்ளி, கல்லூரியில் படித்து முதல் முயற்சி யிலேயே டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று டிஎஸ்பியாக பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் புதனன்று நடை பெற்ற புதுக்கோட்டை 5-ஆவது புத்தகத் திருவிழாவில் பவனியாவை பாராட்டி பொன்  னாடையும் நினைவுப் பரிசும் வழங்கி, ஐஏஎஸ் கனவு நனவாக வேண்டுமென வாழ்த்து தெரி வித்தார். அதற்கான உதவிகளையும் செய்வ தாகக் கூறினார். நிகழ்வில், கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை உள்  பட பலரும் பாராட்டினர். மேலும், பவானியா  கூறும்போது, எனது சிறுவயது கனவு ஐஏஎஸ் ஆவதுதான். அந்த இலக்கை அடைய  கிராமம், நகரம், தமிழ் வழி, ஆங்கில வழி என்ற  எதுவும் தடையில்லை. அதற்கான பயணம் தொடர்கிறது என்றார்.